நியூசிலாந்து: நியூசிலாந்து நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் நியூசிலாந்து அரசு நாட்டின் பொருளாதாரம் மந்த நிலைக்கு சென்று இருப்பதை உறுதி செய்துள்ளது.
2024ஆம் ஆண்டில் தொடர்ந்து இரண்டாவது காலாண்டாக நியூசிலாந்தின் பொருளாதாரம் வளர்ச்சி அடையாமல் எதிர்மறையாகவே இருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் இப்படி ஒரு பொருளாதார சரிவினை எதிர்கொண்டது இல்லை என நியூசிலாந்து மக்கள் கூறுகின்றனர். பண வீக்கம் அதிகரித்தது, வேலைவாய்ப்பின்மை, பொருட்களின் விலை உயர்வு என மக்கள் அல்லல்படுகின்றனர்.

நியூசிலாந்து நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபி 2024 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 1 சதவீதம் சரிவை கண்டுள்ளது. இதனால் பணவீக்கம் அதிகரித்து பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. கொரோனா நோய் தொற்று காலத்தில் ஏற்பட்ட பொருளாதார சரிவை தவிர்த்து பார்க்கும் போது நியூசிலாந்து நாட்டின் பொருளாதாரம் 1991 ஆம் ஆண்டுக்கு பிறகு மிகவும் மோசமான பெருமந்தத்தை தற்போது சந்தித்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் அடுத்த காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் என நம்புவதாக நியூசிலாந்து நிதி அமைச்சர் நிக்கோலா நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 0.2 சதவீதம் சரிவடையும் என கணிக்கப்பட்ட நிலையில் அது 1 சதவீதம் என சரிவடைந்து அதிர்ச்சி அளித்துள்ளது.
இது தவிர நியூசிலாந்து நாட்டின் கரன்சி மதிப்பு இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவாக சரிவடைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான ஒரு நியூசிலாந்து டாலரின் மதிப்பு 0.514 என இருக்கிறது. இவ்வாறு நாட்டின் கரன்சி மதிப்பு சரிவடைந்து இருப்பதால் இறக்குமதிக்கும், அந்நிய செலாவணிக்கும் அதிகமான தொகையை செலவிட வேண்டி இருக்கிறது.
உற்பத்தி, கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளும் மந்த நிலையிலேயே இருக்கின்றன.
வேலைவாய்ப்பின்மை, கடன்களை திரும்ப செலுத்த முடியாத சூழல், விலைவாசி உயர்வு , நுகர்வு குறைந்தது என நாள்தோறும் பிரச்சினை அதிகரித்து வருவதாக மக்கள் கூறுகின்றனர்.
இதனிடையே நியூசிலாந்து நாட்டின் மத்திய வங்கி பல்வேறு வட்டி குறைப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளது. வேலைவாய்ப்பின்மை பிரச்சனை, பொருளாதார மந்தநிலை மற்றும் வட்டி விகிதங்கள் காரணமாக நியூசிலாந்து நாட்டு மக்கள் வேறு நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.
இதனிடையே பொருளாதார மந்தநிலையை சரி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக நியூசிலாந்து அரசு கூறியுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications