அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட இரண்டே நாட்களில் நியூஸ் மேக்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2000 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அமெரிக்காவில் மிகப்பெரிய செய்தி நிறுவனமாக ஃபாக்ஸ் நியூஸ் பார்க்கப்படுகிறது. அமெரிக்க பங்குச்சந்தையில் அதிக மதிப்பு கொண்ட நிறுவனமாகவும் இது தான் இருந்தது.
ஆனால் அமெரிக்க செய்தி ஊடகங்களை எல்லாம் தூக்கி சாப்பிடக்கூடிய வகையில் கேபிள் நியூஸ் நிறுவனமான நியூஸ் மேக்ஸ் தற்போது அதிக சந்தை மதிப்பீடு கொண்ட நிறுவனமாக மாறியிருக்கிறது. கடந்த திங்கட்கிழமை அன்று தான் நியூஸ் மேக்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ வெளியிடப்பட்டு அமரிக்க பங்குச்சந்தையில் பட்டியல் இடப்பட்டது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட இரண்டே நாட்களில் இதன் பங்கு மதிப்பு 2000 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

அதாவது 10 டாலர்கள் என திங்கட்கிழமை அன்று நியூஸ் மேக்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு பங்குச் சந்தையில் பட்டியலானது அதுவே செவ்வாய்க்கிழமை அன்று பங்குச்சந்தை முடியும் போது 233 டாலர்கள் என உயர்ந்திருக்கிறது. இதன் மூலம் நியூஸ் மேக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிறிஸ் ரூடி பெரும் பணக்காரராக மாறியிருக்கிறார். இதில் முதலீடு செய்த பலரும் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.
நியூஸ் மேக்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்ந்ததை அடுத்து அதன் சந்தை மூலதன மதிப்பும் 30 பில்லியன் டாலர்களாக அதிகரித்து இருக்கிறது. இதன் மூலம் அமெரிக்க ஊடக நிறுவனங்களிலேயே ஃபாக்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் டிரம்ப் மீடியா ஆகியவற்றையெல்லாம் கடந்து அதிக சந்தை மூலதன மதிப்பு கொண்ட நிறுவனமாக நியூஸ் மேக்ஸ் மாறி இருக்கிறது.
குறிப்பாக சில்லறை முதலீட்டாளர்கள் பலரும் நியூஸ் மேக்ஸ் நிறுவன பங்குகளை வாங்குவதற்கு அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். ஐபிஓ வெளியிட்டீல் மட்டும் நியூஸ் மேக்ஸ் நிறுவனம் 7.5 மில்லியன் பங்குகளை விற்பனை செய்தது.
செவ்வாய்க்கிழமை அன்று மட்டும் இந்த நிறுவனத்தின் 11 மில்லியின் பங்குகள் கை மாறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் 41.8 மில்லியன் டாலர்கள் நஷ்டத்தில் இருந்த நிறுவனம்தான் நியூஸ் மேக்ஸ். 2024 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் நஷ்டம் 72 மில்லியன் டாலராக உயர்ந்தது. இந்த நிலையில் பங்குச்சந்தையில் பட்டியல் இடப்பட்டு தற்போது அதிக மதிப்பு கொண்ட ஊடக நிறுவனம் என்ற பெருமையை இது பெற்றிருக்கிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இப்படித்தான் அமெரிக்க பங்குச்சந்தையான நாஸ்டாக்கில் டிரம்ப் மீடியா நிறுவனம் பட்டியலிடப்பட்டு மிகப்பெரிய அளவில் லாபம் தரும் ஒரு பங்காக மாறியது. இதன் ஒரு பங்கு மதிப்பு 20 டாலர்களாக இருக்கிறது.
More From GoodReturns

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

டிரம்ப் செய்யும் தில்லுமுல்லு.. உண்மையை உடைத்த ஈரான் தலைவர்..!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

யாருடைய கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி? அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லும் புது கணக்கு

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?



Click it and Unblock the Notifications