பேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் இணை நிறுவனர்களான கெவின் சிஸ்ட்ரோம் மற்றும் மைக் க்ரீகர் இருவரும் ராஜிநாமா செய்துள்ளனர்.
புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பகிரும் சமுக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகக் கெவின் சிஸ்ட்ரோமும், தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக மைக் க்ரீகரும் இருந்து வந்தனர். இருவரும் ராஜிநாமா செய்ய இருப்பதாக நியூ யார்க் டைம்ஸ் திங்கட்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
ஏன் ராஜினாமா செய்தார்கள்
கெவின் சிஸ்ட்ரோம் மற்றும் மைக் க்ரீகர் இருவரும் ஏன் ராஜினாமா செய்தார்கள் என்ற காரணத்தினைத் தெரிவிக்கவில்லை, இன்ஸ்டாகிராமின் செய்தி தொடர்பாளரும் இது குறித்துத் தற்போதைக்குக் கருத்துக்கள் கூற முடியாது ஏன்று மறுத்துவிட்டார்.
பேஸ்புக் - இன்ஸ்டாகிராம்
பேஸ்புக் நிறுவனம் இன்ஸ்டாகிராம் நிறுவனத்தினை 2012-ம் ஆண்டு 1 பில்லியன் டாலர் அளித்து வாங்கியது. இதில் 1 பில்லியனுக்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக்க இருந்து புகைப்படம், வீடியோ மற்றும் தகவல் பரிமாற்றங்களைச் செய்து வருகின்றனர்.
அது மட்டும் இல்லாமல் ஸ்னாப் ஷாட் போட்டியாக 2016-ம் ஆண்டு 24 மணி நேரத்தில் மறையக் கூடிய ஸ்லைட்ஷோ சேவையினையும், ஸ்டோரிஸ் சேவையினையும் வழங்கியது.
வருவாய்
பேஸ்புக் நிறுவனத்தினை விட அதிக வருவாயினை ஈட்டும் நிறுவனமாக இன்ஸ்டாகிராம் வளர்ந்து வந்தது. ஆனால் ஐரோப்பிய தனியுரிமை சட்டம் போன்றவற்றால் இரண்டு நிறுவனங்களின் வருவாயும் சரிந்தது.
வாட்ஸ்ஆப்
பேஸ்புக் நிறுவனரான மார்க் ஜூக்கர்பெர்க் கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா சர்ச்சையில் சிக்கிய சில நாட்களில் அதன் துணை நிறுவனமான வாட்ஸ்ஆப்-ன் இணை நிறுவனர் ஜான் கோம் பேஸ்புக்கை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி அடுத்தது பேஸ்புக் நிறுவனத்தினை விட்டுத் துணை நிறுவனங்களின் தலைவர்கள் வெளியேறி வருவது சர்ச்சையினை ஏற்படுத்தி வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications