உலகின் முன்னணி ஆன்லைன் டாக்ஸி சேவை அளிக்கும் உபர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, கடந்த மாதம் இந்நிறுவனத்தின் சிஇஓ பதவியில் இருந்து வெளியேறி நிலையில், இப்பதிவிக்கு புதிய அதிகாரியை நியமிக்க உபர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில் உபர் நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான டிராவிஸ் காலாநிக் நிர்வாகத்தை விட்டு வெளியேறினார்.
இத்தகைய மதிப்பும் பொறுப்பும் நிறைந்த பணியிடத்தில் யார் நியமிக்கப்படுவார்கள் என்ற கேள்வி டிராவிஸ் வெளியேறிய நாள் முதலே நிலவி வருகிறது.
குவியும் விருப்பங்கள்
சர்வதேச தொழில்நுட்ப சந்தையில் மிகப்பெரிய தாக்கதை ஏற்படுத்திய உபர் நிறுவனத்திற்கு சிஇஓ பதிவிக்கு பல முன்னணி நிறுவனத்தின் தலைவர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.
இதில் முக்கிய இடம் மற்றும் முன்னுரிமையை பெற்று இருப்பது ஒரு இந்தியர் என்பது மகிழ்ச்சியான செய்தி.
நிகேஷ் அரோரா
கூகிள் மற்றும் சாப்ட்பாங்க் நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரியான நிகேஷ் அரோரா இந்த போட்டியில் முன்னிலை வகிக்கிறார்.
மேலும் உபர் நிர்வாகமும் இவருக்கு அதிகளவிலான ஆதரவை அளித்து வருகிறது. இவருடன் போட்டி போடும் அதிகாரிகளை பார்க்கும் போது இவருக்கு இந்த பணி கிடைக்குமா என்று சந்தேகமும் எழுகிறது.
இப்பதவிக்கு போட்டியிடும் முக்கிய தலைகள்.
சுசன் வோசிச்க்
இவர் யூடியூப் நிறுவனத்தின் தலைவர்.
ஆடம் பெயின்
டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ
வெர்ஜின் அமெரிக்கா
இந்நிறுவனத்தின் முன்னாள் சிஇஓவான டேவிட் கஷ்
யாஹூ
உலகின் முன்னணி இண்டர்நெட் நிறுவனமாக விளங்கிய யாஹூ நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ மரிசா மேயர் அவர்களுக்கும் இந்த பணிக்கு போட்டி போட்டு வருகிறார்.
தாமஸ் ஸ்டேக்ஸ்
டிஸ்னி நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல்பாட்டு அதிகாரியான தாமஸ் ஸ்டேக்ஸ்.


Click it and Unblock the Notifications