எச்-1பி விசா குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டு வரும் இந்த நேரத்தில் அமெரிக்க அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் எச்-1பி விசா சட்டத்தில் எந்தத் திருத்தமும் செய்யவில்லை என்றும் முன்பு இருந்த சட்டத்தின் படியே வழங்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.
எச்-1பி விசா குறித்த எந்தச் சட்ட மசோதாவிற்கும் இது வரை ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்று தெற்கு ஆசியாவின் தற்காலிக துணை செயலாளர் தாமஸ் வாஜ்தா கூறியுள்ளார்.
எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
எச்-1பி விசா விதிகளில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திருத்தங்கள் செய்ய கூறி இருந்தாலும் இது வரை எந்த நடவடிக்கைகளும் இது குறித்து எடுக்கப்படவில்லை. சட்டத் திருத்த செய்ய நிறைய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது, எனவே இதுவரை சட்டத் திருத்த மசோதா எதுவும் வெற்றிகரமாகத் தாக்கல் செய்யப்படவில்லை என்றார்.
டொனால்டு டிரம்ப்
டொனால்டு டிரம்ப் அவர்கள் அதிபர் தேர்தலின் போது எச்-1பி, மற்றும் எல்1 விசா மீதான சட்டங்கள் திருத்தப்பட்டு கடுமையாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து இருந்தார்.
சுரேஷ் பிரபு
இந்திய காமர்ஸ் துறை அமைச்சரான சுரேஷ் பிரபு அவர்கள் இந்திய ஐடி ஊழியர்கள் குறித்தன எச்-1பி மற்றும் எல்1 விசாக்கல் குறித்து வலுவாக வாஷிங்டன்னில் கருத்துகளை எடுத்து வைத்துள்ளதாகவும் அக்டோபர் மாதம் தெரிவித்து இருந்தார்.
பெட் கோக்
அமெரிக்காவில் இருந்து பெட் கோக் இறக்குமதி குறித்து கேட்டதிற்கு அமெரிக்க பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றல் துறையினை மிகவும் நம்பி இருக்கிறது என்றார். அதிகப்படியாக ஏற்றுமதியைச் செய்து இந்திய பொருளாதாரத்தினை ஊக்குவிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
ரோஹிங்கியா அகதிகள்
அமெரிக்க அரசு ரோஹிங்கியா அகதிகளுக்கு பங்களாதேஷ் அரசுடன் இணைந்து உதவ சர்வதேச இயக்கங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், இதன் மூலம் ஆகஸ்ட் முதல் தற்போது வரை 6,00,000 ரோஹிங்கியா அகதிகள் வங்க தேசத்தில் உதவிகளைப் பெற்று வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.
வங்கதேசம் மற்றும் மியான்மார் அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தும் பணிகளும் நடைபெற்று வருவதாகவும் இதன் மூலம் ரோஹிங்கியா அகதிகள் சிக்கலுக்கு சுமுகமான முடிவுகள் எடுக்கப்படும் தெரிவித்தார்.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications