அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றார். அதிபராக பதவி ஏற்றதில் இருந்து டிரம்ப் மேற்கொள்ளப்பட்டு வரக்கூடிய பல்வேறு நடவடிக்கைகளும் அந்நாட்டு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றன.
டிரம்ப் நிர்வாகத்தையும் டிரம்பின் கொள்கைகளையும் எதிர்த்து லட்சக்கணக்கான மக்கள் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் ஒன்று திரண்டு மிகப்பெரிய அளவிலான போராட்டத்தை நடத்தி இருக்கின்றனர். No Kings என்ற பெயரில் அமெரிக்காவின் 50 மாநிலங்களில் 2700 இடங்களில் டிரம்புக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றன.

டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் மக்களின் அரசியல் சாசன உரிமைகளை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவதாகவும், குடியுரிமை கொள்கைகளில் கடுமையான மாற்றங்களை கொண்டு வருவதாகவும் , கருத்து சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் குற்றம்சாட்டி இந்த போராட்டம் நடைபெற்றது. சனிக்கிழமை அன்று அமெரிக்கா முழுவதும் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 70 லட்சம் மக்கள் பங்கேற்றனர் .
டிரம்ப் சர்வாதிகாரி போல செயல்படுகிறார் என இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். இந்த ஆண்டில் மட்டும் டிரம்புக்கு எதிராக நடைபெறக்கூடிய மூன்றாவது மிகப்பெரிய மக்கள் போராட்டம் இதுவாகும். நியூயார்க், வாஷிங்டன், பென்சில்வேனியா உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான இந்த போராட்டங்கள் நடைபெற்றது.
நியூயார்க்கின் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டன. அப்போது No kings, only democracy no dynasty, power to the people என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்தி இருந்தனர். சான் டியாகோ, கலிபோர்னியா, வாஷிங்டன் போன்ற முக்கிய நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர் .
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகள் ஜனநாயகத்திற்கே அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். குறிப்பாக அரசு மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதிகளை குறைத்து வருவதாகவும் , அமெரிக்க அரசு என்பது ஜனநாயக ரீதியிலான தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளே தவிர இது ஒன்றும் மன்னர் ஆட்சி கிடையாது என அவர்கள் தெரிவித்தனர்.
டிரம்ப் இந்த நாட்டின் மன்னர் கிடையாது அவர் போடும் உத்தரவுகளை நாங்கள் ஏற்க வேண்டும் என்று அவசியமும் கிடையாது என பலரும் தெரிவித்தனர். நாடு முழுவதும் அமைதியான முறையில் இந்த போராட்டங்கள் நடைபெற்றன எந்த பகுதியிலும் எந்த ஒரு வன்முறையோ அல்லது மோதல்களோ ஏற்படவில்லை .
இதனிடையே தனக்கு எதிரான இந்த போராட்டம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னுடைய எதிர்வினையை வெளிப்படுத்தி இருக்கிறார். போராட்டக்காரர்கள் அனைவரும் நான் மன்னனை போல செயல்படுவதாக கூறியுள்ளனர், ஆனால் நான் மன்னன் இல்லை, ஜனநாயக கட்சியினர் ஆட்சியில் இருந்தபோது செய்த தவறுகளை நான் சரி செய்து வருகிறேன் என கூறியுள்ளார்.
More From GoodReturns

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

யாருடைய கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி? அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லும் புது கணக்கு



Click it and Unblock the Notifications