அமெரிக்காவில் வேலை செய்யும் வெளிநாட்டவர்கள் அதிகளவில் ஹெச்1பி விசா வாயிலாகவே பணியாற்றி வருகின்றனர். தற்போது அமெரிக்காவின் டிரம்ப் அரசு பிற நாடுகளுக்கு அளிக்கப்படும் வேலைவாய்ப்புகளை அதிகளவில் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பெரிய அளவிலான கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில்...
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கும் பிற நாட்டவர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி செய்தியை அளித்துள்ளது டிரம்ப் அரசு.
ஹெச்1பி விசா
முன்னாள் அதிபர் பராக் ஓபாமா தலைமையிலான ஆட்சியின் போது அமெரிக்காவில் ஹெச்1பி விசா உடன் வாழும் வெளிநாட்டு மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் அவர்களின் துணைகள் (கணவன் / மனைவி) இந்நாட்டிலேயே பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டது.
இதனால் பல ஆயிரம் இந்தியர்கள் பலன் பெற்றனர்.
தடை..
தற்போது டிரம்ப் அரசு இத்தகைய முறையை முழுமையாக நீக்க முடிவு செய்யத் திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்து வருவதாக அமெரிக்க அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் வாயிலாக அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மட்டும் அல்லாமல் பிற நாட்டவர்களும் அதிகளவிலான பாதிப்பை சந்திக்க நேரிடும்.
ஹெச் 4 விசா
ஹெச்1பி விசா வைத்துள்ளவர்களின் மனைவி அல்லது கணவன் பட்டம் பெற்று இருக்கும் நிலையில் அவர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்க ஓபாமா அரசு காலத்தில் அந்நாட்டில் வேலை செய்ய ஹெச்4 விசா அளித்தது.
இது இந்தியர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது என்றால் மிகையாகாது.
70,000 பேர்
தற்போது டிரம்ப் அரசு இத்திட்டத்தை முழுமையாக ரத்துச் செய்ய முடிவு செய்துள்ளதின் வாயிலாக ஹெச்1பி விசா பெற்றுள்ள சுமார் 70,000 பேர் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும்.
கிரீன்கார்டு
அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டவர்கள் அந்நாட்டின் குடியுரிமை பெற வேண்டும் என்பதற்காக விண்ணப்பங்களை அதிகளவில் அளித்து வருவதால், இதனைத் தணிக்கை செய்யவும் ஆய்வு செய்யவும் 10 வருடத்திற்கும் அதிகமான காலம் தேவைப்படும் காரணத்தால் ஒபாமா அரசு ஹெச்1பி விசா வைத்துள்ள நபரின் துணை பணியாற்ற இத்திட்டத்தை ஓபாமா அரசு கொண்டு வந்தது.
2017 வரையில்...
ஜூன் 2017 வரையில் சுமார் 71,287 பேருக்கு ஹெச்4 விசா அளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க விசா தரவுகள் கூறப்படுகிறது.
இதில் 94 சதவீதம் பேர் பெண்கள், அதிலும் 93 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தககது. இந்தியாவைத் தொடர்ந்து சீனா 4 சதவீதமாக உள்ளது.
சுந்தர் பிச்சை..!
ஆன்லைனில் பெரும்பாலானவை போலி தான்


Click it and Unblock the Notifications