2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது . நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் இன்றைய தினம் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு கடந்த வாரம் முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. மருத்துவம், இயற்பியல் ,வேதியியல் , இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு குறித்து அறிவிப்புகள் வெளியாகின . அதன் தொடர்ச்சியாக இன்று 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார பிரிவுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கோயல் மோகிர், பிலிப் அகியோன் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகிய மூன்று பேருக்கு கூட்டாக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் பிலிப் அகியோன் பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர் . கோயல் மோகிர் மற்றும் பீட்டர் ஹொவிட் ஆகியோர் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் ஆவர். பொருளாதார பிரிவில் புதுமையுடன் கூடிய பொருளாதார வளர்ச்சிக்கான ஆய்வுக்காக இவர்கள் மூவருக்கும் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுவதாக நோபல் கமிட்டி தெரிவித்து இருக்கிறது .
தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கான வழிமுறைகளை அடையாளப்படுத்தியதற்காக ஜோயல் மோகிருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல creative destruction அதாவது புது தொழில்நுப்டங்களின் வருகையால் பழைய தொழில்கள் நீங்கி புதிய பொருளாதாரம் உருவாகும், இந்த பழைய கொள்கைகளை நீக்கி புதிய கொள்கைகள் மூலமாக நீடித்த வளர்ச்சி என்ற ஆய்வுக்காக பிலிப் அகியோன் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகிய இருவருக்கும் பொருளாதாரப் பிரிவுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
இந்த நோபல் பரிசு மூலம் கிடைக்கக்கூடிய தொகையில் பாதி தொகையை ஜோயலும், மீதமுள்ள தொகையை பிலிப் மற்றும் பீட்டர் ஆகியோரும் பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர். 1896 ஆம் ஆண்டில் மறைந்த ஸ்வீடன் பணக்காரரும் டைனமைட் வெடிபொருளை கண்டுபிடித்தவருமான ஆல்ஃபிரெட் நோபலின் நினைவு தினம் வரும் டிசம்பர் 10ஆம் தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெற இருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் நோபல் பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன.
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசினை பொருத்தவரை 1968 ஆம் ஆண்டிலிருந்து தான் வழங்கப்படுகிறது. ஸ்வீடன் மத்திய வங்கி தான் இந்த விருது நோபல் பரிசினை பாரம்பரியமாக வழங்கும் நோபல் பரிசுகளின் பட்டியலில் இணைத்து அறிமுகம் செய்து வைத்தது. 2024 ஆம் ஆண்டில் கூட மூன்று பொருளாதார நிபுணர்களுக்கு தான் பொருளாதார பிரிவுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது .
1968 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 56 முறை பொருளாதார பிரிவுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன 96 பேர் இவற்றை பெற்றுள்ளனர் இவற்றில் பெரும்பாலானவர்கள் ஆண்கள் . இதுவரை மூன்று பெண்கள் மட்டுமே பொருளாதார பிரிவுக்கான நோபல் பரிசினை பெற்றிருக்கிறார்கள்.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications