பாரிஸ்: சந்தையில் மீண்டும் இறங்க நோக்கியா நிறுவனம் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டெலிகாம் உபகரணங்களை உற்பத்தி செய்யும் அல்காடெல் லூசன்ட் நிறுவனத்தை 16.58 பில்லியன் டாலருக்கு வாங்க இரு நிறுவனங்களும் ஒப்புக்கொண்டன.
இதன் படி அல்காடெல் லூசன்ட் நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் நோக்கியா கைப்பற்ற உள்ளது.
பங்கு பரிமாற்றம்
இரு நிறுவனங்களுக்கு மத்தியிலான இந்த ஒப்பந்தத்தில் அல்காடெல் லூசன்ட் நிறுவனத்தின் மொத்த பங்கு இருப்பில் 66.5 சதவீத பங்குகள் நோக்கியாவிடமும், மீதமுள்ள 33.5 சதவீத பங்குகள் அல்காடெல் லூசன்ட் கஜனாவில் வைத்துக்கொள்ளும்.
மேலும் இருநிறுவனங்களுக்கு மத்தியிலான பங்கு பரிமாற்றம் 2016ஆம் ஆண்டின் முதல் பாதியில் நடைபெறும் எனநோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெலிகாம் சாதனங்கள்
நோக்கியா நிறுவனம் மொபைல் விற்பனை சந்தையில் இருந்து விலகிய நிலையில், டெலிகாம் உபகரணங்கள் துறையை மேம்படுத்தவே இந்த நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளதாகக் கூறுகிறது.
சந்தை மதிப்பு
டெலிகாம் உபகரணங்கள் சந்தையில் நோக்கியாவின் புதிய கூட்டணி 35 சதவீத சந்தையும், எரிக்சன் 40 சதவீத சந்தையும்,ஹூவாய் 20 சதவீத சந்தையைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
எரிக்சன்
உலகளவில் டெலிகாம் துறை சார்ந்த உபகரணச் சந்தையில் எரிக்சன் முன்னணியாகத் திகழ்கிறது, சில மாதங்களுக்கு முன் இந்நிறுவனத்தின் நிதி நிலை மோசமாக இருந்தது. அதன் பின் செலவீண குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.
பங்குச் சந்தை
இந்த ஒப்பந்தத்தின் மூலம் நோக்கியா நிறுவன பங்குகள் 7 சதவீத சரிவையும், அல்காடெல் லூசன்ட் நிறுவனம் சுமார் 16 சதவீத உயர்வையும் சந்தித்ததுள்ளது குறிப்பிடத்தக்கத்து.
பணியாளர்கள் எண்ணிக்கை
வருடத்தில் 26 பில்லியன் யூரோ வர்த்தகத்தைச் சந்திக்கும் இவ்விருநிறுவனத்தில் மொத்த 1,14,000 பணியாளர்கள்பணியாற்றி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications