பாரிஸ்: உலகின் முன்னணி மொபைல் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமாக திகழ்ந்த நோக்கியா நிறுவனத்தின் பெரும்பலான சொத்துக்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கியுள்ளது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
விற்பனை, தயாரிப்பு, வர்த்தகம் என அனைத்திலும் முடங்கிய நிலையில் நோக்கியா நிறுவனம் 42.16 பில்லியன் டாலர் மதிப்புள்ள பிரான்ஸ் நிறுவனத்தை வாங்க திட்டமிட்டுள்ளது.
அல்காடெல் லூசன்ட்
பிரான்ஸ் நாட்டின் தொலைதொடர்பு துறை சார்ந்த பொருட்களை தயாரிக்கும் அல்காடெல் லூசன்ட் நிறுவனத்தை கைபற்ற நோக்கியா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பேச்சுவார்த்தை
அதுக்குறித்து நோக்கியா நிறுவனம் கூறுகையில், இரு நிறுவனங்களுக்கு மத்தியில் நடந்து வரும் பேச்சுவார்த்தை மிகவும் ஆரம்பகட்டத்தில் மட்டுமே உள்ளது என தெரிவித்துள்ளது.
கிளைகள்
அல்காடெல்-லூசன்ட் நிறுவனம் அமெரிக்க மற்றும் பிரான்ஸ் நாட்டு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாக்கப்பட்டது. இந்நிறுவனம் இந்தியா உட்பட உலகில் பல நாடுகளில் செயல்பட்டு வருவது குறிப்பிடதக்கது.
ஏர்டெல்
இந்தியாவில் இந்நிறுவனம் ஏர்டெல் நிறுவனத்திற்கு வன்பொருள் சேவை மற்றும் மேம்பாட்டு பணிகளில் ஈடுப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications