அமைதிக்கான நோபல் பரிசுக்கு எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க்-கை நார்வே நாடாளுமன்ற உறுப்பினர் மரியஸ் நில்சன் பரிந்துரைத்துள்ளார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு நார்வே நோபல் குழு பொறுப்பாகும். இந்தப் பரிசுக்கான பரிந்துரையை பரிந்துரைக்க தகுதியுடைய எந்தவொரு நபரும் சமர்ப்பிக்கலாம்.
அப்படித்தான் எலான் மஸ்க்கை மரியஸ் நில்சன் பரிந்துரைத்துள்ளார்.
மஸ்க்கை கருத்துச் சுதந்திரமான பேச்சுக்கு உறுதியான ஆதரவாளர் என்று மரியஸ் நில்சன் அவரை பாராட்டி பேசியுள்ளார்.

பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு கடிவாளம் போடப்பட்டுள்ள இந்த உலகில் ஒருவரின் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு உறுதியான ஆதரவு தருவதற்காக மஸ்க்கைத் தேர்ந்தெடுத்தேன். மஸ்கின் தொழில்நுட்ப நிறுவனங்கள் உலகத்தை ஒருங்கிணைக்கவும், பாதுகாப்பான இடமாக மாற்றவும் உதவியது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவின் படையெடுப்பின் போது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை உக்ரைனுக்கு வழங்கியதற்காக நில்சன் மஸ்க்குக்கு நன்றி. மஸ்க் பல தொழில்நுட்ப நிறுவனங்களை நிறுவி, அதை அவரே இயங்கி வருகிறார்.
அக்டோபர் 2022 இல், எலான் மஸ்க் $44 பில்லியன் செலுத்தி ட்விட்டரை விலைக்கு வாங்கினார். உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்திய பிறகு எக்ஸ் எனப் பெயர் மாற்றி வணிகம் மற்றும் சமூக ஊடக நெட்வொர்க் இரண்டையும் முழுமையாக மறுவடிவமைப்பு செய்துள்ளார். கருத்து சுதந்தரத்துக்கு முழு ஆதரவாளராக தன்னை மஸ்க் நிலைநிறுத்திக் கொண்டார். முந்தைய ட்விட்டர் நிர்வாகத்தின்போது தடைசெய்யப்பட்ட பல முக்கிய பிரமுகர்களின் கணக்குகளை மஸ்க் மீட்டெடுத்துள்ளார் என்று மரியஸ் நில்சன் கூறினார்.
எக்ஸ் மற்றும் டெஸ்லாவைத் தவிர, மஸ்க் ஸ்பேஸ்எக்ஸ், தி போரிங் கம்பெனி மற்றும் நியூராலிங்க் ஆகியவற்றுக்கும் சொந்தக்காரர் ஆவார்.
ப்ளூம்பெர்க் மதிப்பின்படி 2024 பிப்ரவரி 21 ஆம் தேதியன்று பில்லியனர் மஸ்க்கின் மொத்த நிகர மதிப்பு $209 பில்லியன் ஆகும்.
என்னதான் பல காரணங்களை எலான் மஸ்குக்காக பல சப்பைக்கட்டுகளை மரியஸ் நில்சன் கட்டினாலும் அதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பும் விமர்சனங்களும் குவிந்து வருகின்றன.
நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்ட சர்ச்சைக்குரியவர்களில் எலான் மஸ்க் தவிர அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்பும் ஒருவர்.
Story written by: I. Jayachandran


Click it and Unblock the Notifications