அமெரிக்கா, இங்கிலாந்து , சிங்கப்பூரை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் இந்தியர்களுக்கு ஆப்பு..!

தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களுக்காக 457 விசா ஒவ்வொரு ஆண்டும் 95,000 ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்றது. ஆஸ்திரேலியாவில் வெலையின்மை அதிகரித்து வரும் காரணத்தினால் இப்போது 457 விசாவிற்குத் தடை விதிக்கப்பட்டு

ஆஸ்திரேலியா அரசு வொர்க் விசாவான 457 விசாவிற்குத் தடை விதித்துள்ளது. அமெரிக்காவின் எச்-1பி விசா போன்று ஆஸ்திரேலியாவில் பணிபுரிய வேண்டும் என்றால் 457 விசா தேவை.

தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களுக்காக 457 விசா ஒவ்வொரு ஆண்டும் 95,000 ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்றது. ஆஸ்திரேலியாவில் வெலையின்மை அதிகரித்து வரும் காரணத்தினால் இப்போது 457 விசாவிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

457 விசா என்றான் என்ன?

457 விசா என்றான் என்ன?

ஆஸ்திரேலியாவில் தங்களுக்குத் தேவையான திறன் வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்றால் தற்காலிகமாக நான்கு ஆண்டுகளுக்கு 457 விசா பயன்படுத்தி வெளிநாட்டு ஊழியர்களைப் பணியில் ஆஸ்திரேலியா நிறுவனங்களால் பணியில் அமர்த்த முடியும்.

யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள்?

யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள்?

ஏற்கனவே 457 விசா பயன்படுத்தி ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து வருபவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை, புதிதாக ஆஸ்திரேலியா சென்று பணி புரிய மட்டும் 457 விசா வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் எப்படி எச்-1பி விசா வைத்திருப்பதில் இந்தியர்கள் அதிகமோ அப்படியே ஆஸ்திரேலியாவிலும் இந்தியா, இங்கிலாந்து மாற்றும் சீனாவில் இருந்து அதிக நபர்கள் பணிபுரிகின்றனர். 2016 செப்டம்பர் மாதக் கணக்கின் படி ஆஸ்திரேலியாவில் 95,757 வெளிநாட்டு ஊழியர்கள் 457 விசா பயன்படுத்திப் பணிபுரிந்து வருகின்றனர்.

 

ஏன் இந்தத் தடை?

ஏன் இந்தத் தடை?

ஆஸ்திரேலியா அரசு தங்களுக்குத் தேவையான திறன் இல்லாது ஊழியர்களைத் தாற்காலிகமாக எடுத்துக்கொள்ளவே இந்த விசா முறை அறிமுகம் செய்ததாதவும், ஆனால் நிறுவனங்கள் சில வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியர்களுக்குப் பயிற்சி அளித்து ஊழியர்களை மாற்றும் என்று பார்த்தால் தொடர்ந்து வெளிநாட்டு ஊழியர்களையே பயன்படுத்தி வருவதாகவும் அதனால் 457 விசா முறையைத் தடை செய்வதாகவும் ஆஸ்திரேலியா பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித்தார்.

ஏற்கனவே 457 விசா பயன்படுத்தி ஆஸ்திரேலியாவில் உள்ளவர்களுக்கு என்ன பாதிப்பு?

ஏற்கனவே 457 விசா பயன்படுத்தி ஆஸ்திரேலியாவில் உள்ளவர்களுக்கு என்ன பாதிப்பு?

புதிதாக ஆஸ்திரேலியா 457 விசா பயன்படுத்தி வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கு 4 ஆண்டுகளை 2 ஆண்டுகளாகக் குறைக்கவும், 2 வருடங்களுக்கு அதிகமாகப் பணிப்புரிய வேண்டும் என்றால் நல்ல ஆங்கிலத் திறனும் இருக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது.

457 விசா வரலாறு

457 விசா வரலாறு

முதன் முறையாக 457 விசா 1990-ம் ஆண்டு வணிகத் தொழில் மற்றும் மிகவும் திறமையான குடியேறுபவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், ஆனால் இப்போது குறைந்த ஊதியத்திற்காக வெளிநாடு ஊழியர்கள் அழைத்து வரப்படுவதாகவும், இத்தானால் உள்நாட்டில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்காமல் திண்டாடி வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளதாகவும் அதனால் தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அரசு தரப்பு கூறுகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+