உலகின் முன்னணி செமிகண்டக்டர் நிறுவனங்களான என்விடியா (Nvidia) மற்றும் ஏஎம்டி (AMD) ஆகியவை அமெரிக்க நிறுவனங்களாக இருந்தாலும், சீனாவில் அதிகப்படியான வர்த்தகத்தை வைத்துள்ளது. இப்படியிருக்கையில் டிரம்ப் ஆட்சியில் மட்டும் அல்லாமல் பைடன் ஆட்சியிலும் சீனாவுக்கு என்விடியா மற்றும் ஏஎம்டி ஆகியவை தனது உயர்திறன் கொண்ட செமிகண்டக்டர் சிப்-களை விற்க கூடாது என கட்டுப்பாடுகளையும், தடையும் விதிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் என்விடியா மற்றும் ஏஎம்டி ஆகியவை அமெரிக்க அரசுடன் தனது தயாரிப்புகளை சீனாவுக்கு விற்க அனுமதி பெற தொடர்ந்து போராடி வந்தது. இந்த போராட்டத்திற்கு தற்போது விடிவு காலம் பிறந்துள்ளது.

என்விடியா மற்றும் ஏஎம்டி ஆகியவை சீனாவில் விற்பனை செய்யும் செமிகண்டக்டர் சிப்-களில் இருந்து கிடைக்கும் வருவாயில் 15% பங்கை அமெரிக்க அரசுக்கு வழங்குவதற்கு ஒப்புக்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தம், சீனாவிற்கு செமிகண்டக்டர்களை ஏற்றுமதி செய்வதற்கு தேவையான உரிமங்களைப் பெறுவதற்கு அமெரிக்க அரசு விதித்த ஒரு புதுமையான நிபந்தனையாகும்.
இதுகுறித்து பைனான்ஷியல் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில், இந்த ஒப்பந்தம், அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் ஏற்பட்ட ஒரு முக்கிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு, இதுபோன்ற ஒரு வருவாய் பகிர்வு ஒப்பந்தத்தை எந்தவொரு அமெரிக்க நிறுவனமும் ஏற்றுமதி உரிமங்களைப் பெறுவதற்காக செய்ததில்லை என்று ஏற்றுமதி கட்டுப்பாடு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், என்விடியாவின் H20 செமிகண்டக்டர் சிப் மற்றும் ஏஎம்டியின் MI308 செமிகண்டக்டர் சிப் விற்பனையில் இருந்து கிடைக்கும் வருவாயில் 15% அமெரிக்க அரசுக்கு செலுத்தப்படும். இந்த ஒப்பந்தம் வாயிலாக தான் கடந்த வாரம் சீனாவிற்கு ஏற்றுமதி உரிமங்களை அமெரிக்க அரசு இவ்விரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் நாடுகள் அமெரிக்காவில் முதலீடு செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதன் மூலம் வரி விகிதங்களை "குறைக்க" முடியும் எனவும் கூறி வருகிறார்.
இந்தப் புதிய ஒப்பந்தம் டிரம்ப்-ன் MAGA கொள்கையின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படும் வேளையில், சீனாவிற்கு செமிகண்டக்டர்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்க, வருவாயில் ஒரு பகுதியை அமெரிக்க அரசுக்கு வழங்குவது ஒரு புதிய முன்னுதாரணத்தை உருவாக்கியுள்ளது. இதை மற்ற நிறுவனங்களும் கையில் எடுக்கலாம் என்ற நிலைப்பாடு வந்துள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், டிரம்ப் நிர்வாகம் சீனாவிற்கு H20 செமிகண்டக்டர்களின் விற்பனையை தடை செய்திருந்தது. ஆனால், ஜூலை மாதம் இந்த தடை நீக்கப்பட்டு, என்விடியாவிற்கு ஏற்றுமதி உரிமங்கள் வழங்கப்பட்டன. இந்த தடை நீக்கப்பட முக்கிய காரணம் சீனா அமெரிக்காவுக்கான அரிய உலோக ஏற்றுமதிக்கு விலக்கு கொடுத்ததன் வாயிலாக டிரம்ப் நிர்வாகம் இந்த சிப் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது.
என்விடியாவின் H20 செமிகண்டக்டர்கள், செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டவை. இவை சீன சந்தையில் பயன்படுத்தப்படுவதற்கு ஏற்றவாறு பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டவை ஆகும். அதேபோல், ஏஎம்டியின் MI308 செமிகண்டக்டர்களும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த செமிகண்டக்டர்கள், உலகளாவிய தொழில்நுட்ப சந்தையில் முக்கியமானவை, குறிப்பாக சீனாவில் இவ்விரு சிப்-களுக்கு பெரும் டிமாண்ட் உள்ளது.
கடந்த நிதியாண்டில், என்விடியா சீனாவில் இருந்து சுமார் 17 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியது, இது அந்நிறுவனத்தின் மொத்த வருவாயில் 13% ஆகும். அதேபோல், ஏஎம்டி 2024ஆம் ஆண்டில் சீனாவில் 6.2 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியது, இது அந்நிறுவனத்தின் மொத்த வருவாயில் 24% ஆகும். இந்த வருவாய் பகிர்வு ஒப்பந்தத்தின் மூலம், அமெரிக்க அரசு ஒவ்வொரு காலாண்டிலும் பல நூறு மில்லியன் டாலர்களைப் பெறலாம்.
அமெரிக்க அரசு சீனாவுக்கு இந்த சிப்-களை தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக விதிக்கப்பட்ட ஏற்றுமதி கட்டுப்பாடுகளையும், தடைகளையும் விதித்தது. ஆனால் தற்போதைய 15 சதவீத வருவாய் பகிர்வு ஒப்பந்தம் மூலம் மொத்த தடையும், இலக்கு நீர்த்துப்போகும் வகையில் அமைந்துள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில், என்விடியாவின் செமிகண்டக்டர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்நிறுவனம், கடந்த ஜூலை மாதம் 4 டிரில்லியன் டாலர்களுக்கு மேல் சந்தை மதிப்பை எட்டிய முதல் நிறுவனமாக உலகளவில் பதிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம், சீனாவில் தொடர்ந்து வணிகம் செய்ய என்விடியாவிற்கு ஒரு முக்கிய வாய்ப்பை வழங்குகிறது, ஆனால் அதே நேரத்தில் அமெரிக்க அரசின் புதிய நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
More From GoodReturns

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications