முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 20 லட்சம் கோடி மதிப்புள்ள மெகா சாம்ராஜ்ஜியமாக இருந்தாலும், சர்வதேச சந்தையில் மிகவும் சிறியது என்பதைக் காட்டியுள்ளது ஒரு சம்பவம்.
ஏஐ மற்றும் கேமிங் சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியா (Nvidia) பங்குகள் ஒரே நாளில் 16% உயர்ந்து அதன் சந்தை மதிப்பீட்டில் 277 பில்லியன் டாலர் உயர்ந்தது. இது ஒட்டுமொத்த அமெரிக்கப் பங்குச்சந்தை முதலீட்டாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ள வேளையில், முகேஷ் அம்பானி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்தியாவின் பெரும் பணக்காரர் மற்றும் நாட்டின் அதிக மதிப்புடைய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை மொத்தமாக Nvidia-வின் ஒரு நாள் வளர்ச்சியில் வாங்க கூடிய அளவுக்கு உயர்ந்துள்ளது.
Nvidia பங்குகள் ஒரே நாளில் 16% உயர்ந்து, அதன் சந்தை மதிப்பீட்டு 277 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்த நிலையில், இதை வைத்து 243 பில்லியன் டாலர் அதாவது ரூ.20 லட்சம் கோடி மதிப்புள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ஐ எளிதாக வாங்க முடியும் என்பது தான் விஷயம்.
ஒரு நாள் Nvidia பங்குகள் வளர்ச்சி அம்பானி குடும்பத்தின் 50 வருட வளர்ச்சியை வாங்க முடியும் என்றால மிகவும் ஆச்சரியப்படும் விஷயமாகும். அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஒரே நாளில் இவ்வளவு பெரிய உயர்வை இதுவரையில் பதிவானது இல்லை, வால் ஸ்ட்ரீட் வரலாற்றில் இது பெரும் சாதனையாகும்.
சமுக வலைத்தளமான பேஸ்புக் அதன் தாய் நிறுவனமான மெட்டா தனது முதல் ஈவுத்தொகையை அறிவித்து வலுவான முடிவுகளை வெளியிட்ட பிறகு, பிப்ரவரி 2 அன்று மெட்டா பங்கு விலை உயர்ந்து, அதன் சந்தை மூலதனம் 196 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்தது.
என்விடியா இப்போது உலகின் நான்காவது அதிக மதிப்புடைய நிறுவனமாக உள்ளது, மைக்ரோசாப்ட் $3 டிரில்லியன், ஆப்பிள் $2.8 டிரில்லியன், சவுதி அராம்கோ $2 டிரில்லியன் மதிப்புடன் முதல் 3 இடத்தைப் படித்திருக்கும் வேளையில், 4வது இடத்தில் என்விடியா 1.94 டிரில்லியன் டாலர் மதிப்பிட்டு உடன் உள்ளது.
என்விடியா-வின் இந்தத் தாறுமாறான வளர்ச்சியில் 243 பில்லியன் டாலர் மதிப்புள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மட்டும் அல்லாமல், 265 பில்லியன் டாலர் மதிப்புள்ள பேங்க் ஆப் அமெரிக்கா, 264 பில்லியன் டாலர் மதிப்புள்ள கோகோ கோலா, 255 பில்லியன் டாலர் மதிப்புள்ள நெட்பிளிக்ஸ், 233 பில்லியன் டாலர் மதிப்புள்ள அக்சென்சர், 214 பில்லியன் டாலர் மதிப்புள்ள மெக்டொனால்டு ஆகியவற்றையும் வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications