என்விடியா நிறுவனம் AI சிப் ஸ்டார்ட்அப் நிறுவனமான க்ரோக்க உடன் ரூ.20 பில்லியன் மதிப்புள்ள லைசென்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது தான் டெக் உலகின் இன்றைய முக்கிய செய்தியாக உள்ளது. இது AI துறையில் என்விடியா-வின் முதலீடுகளை வெறும் விரிவாக்கும் செயலாக பார்க்க முடியாது. அதையும் தாண்டி புனிதமானது.
ஏஐ துறையின் முதுகெலும்பாக செயல்படும் நிறுவனம் தான் என்விடியா, இந்நிறுவனம் தயாரிக்கும் GPU நம்பி தான் ஒட்டுமொத்த ஏஐ துறையும் இருக்கும் காரணத்தால் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த ஆதிக்கத்தை அடித்து உடைக்க சமீபத்தில் கூகுள் நிறுவனத்தின் ஏஐ சிப் பிரபலமாகி வருகிறது. கூகுள் நிறுவனத்தை இந்த போட்டியில் வெளியேற்றும் முயற்சி தான் க்ரோக் உடனான டீல்.
க்ரோக் என்றால் எலான் மஸ்க் உருவாக்கியிருக்கும் Gork இல்லை, இது Groq ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம்.

தற்போது செய்யப்பட்டு உள்ள ஒப்பந்தம் மூலம் க்ரோக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜோனதன் ராஸ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் என்விடியாவில் சேர உள்ளனர். இந்த உரிம ஒப்பந்தம் மூலம் ஏஐ சிப் தொழில்நுட்பத்தை மேம்படுத்த உதவும். இந்த ஒப்பந்தம் AI சிப் சந்தையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். என்விடியா இதன் மூலம் போட்டியை சமாளிக்கிறது.
யார் இந்த ஜோனதன் ராஸ் என்பது தான் டிவிஸ்ட்
ஜோனதன் ராஸ் கூகுளில் முதல் தலைமுறை டென்சர் பிராசசிங் யூனிட் (TPU) உருவாக்கியவர். இந்த TPU தான் தற்போது ஏஐ துறையை ஆட்டிவிக்கும் என்விடியாவின் விலையுயர்ந்த GPUகளுக்கு மாற்றாக உருவாக்கப்பட்டது. கூகுள் இப்போது AI மாடல்கள் பயிற்சி, உருவாக்கத்துக்கு TPU பயன்படுத்துகிறது, இதேபோல் இது சிறப்பாகவும் செயல்படுகிறது.
இதனால் இனி வரும் காலத்தில் ஏஐ நிறுவனங்களுக்கு கூகுளின் டென்சர் பிராசசிங் யூனிட் என்விடியா GPU-க்கு மாற்றாக இருக்கும். இதன் வாயிலாகவே சமீபத்தில் கூகுள் பங்கு உயர்ந்தது, என்விடியா பங்கு குறைந்தது. இப்போது டென்சர் பிராசசிங் யூனிட்-ஐ உருவாக்கிய ஜோனதன் ராஸ்-ஐ என்விடியா-வில் சேருவது மூலம் அடித்த சில மாதத்தில் கூகுள் TPU போல புது ஏஐ சிப் அறிமுகமாகலாம்.
க்ரோக் LPU சிப்:
க்ரோக் நிறுவனம் LPU (லாங்குவேஜ் பிராசசிங் யூனிட்) சிப்களை உருவாக்கியுள்ளது. இது லார்ஜ் லாங்குவேஜ் மாடல்கள் (LLM), ஜெனரேட்டிவ் AIக்கு விரைவான, குறைந்த தாமத செயல்பாட்டு திறனை தருகிறது. TPU போல இதுவும் என்விடியா GPUகளுக்கு மாற்றாக உள்ளது. இந்த போட்டியை தவிர்க்கவே என்விடியா இப்போது க்ரோக் உரிமத்தை பெற்று ஜோனதன் ராஸ் குழுவை தனது நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
ஏஐ துறையில் தற்போது சிறிய அளவிலான போட்டியில் தோல்வியை சந்தித்தாலும் பெரும் பாதிப்பை அதன் பங்கு மதிப்புக்கும் நிறுவனத்திற்கும் ஏற்படுத்துகிறது. இத்தகைய சூழ்நிலையில் ஏஐ பபுள் வெடிக்கும் என்ற அச்சம் அதிகமாக இருக்கும் வேளையில் என்விடியா-வுக்கு போட்டியாக ஏற்கனவே கூகுள் வளர்ந்து வரும் வேளையில், க்ரோக் நிறுவனத்தை வாங்குவது மூலம் இப்போட்டியில் இருந்து கூகுள்-ஐ ஓரம் கட்டும் முயற்சியாக என்விடியா செயல்பட்டு உள்ளது.
More From GoodReturns

எங்களுக்கு இனி Engineers தேவையே இல்ல; AI போதும் – Salesforce CEO திமிர் பேச்சு..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications