அதற்கெல்லாம் வாய்ப்பே இல்ல ராஜா.. சீனா அமெரிக்கா பிரச்சனை மேலும் அதிகமாகலாம்..!

வாஷிங்டன்: அமெரிக்கா சீனா பிரச்சனை என்பது நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே தான் செல்லும். இது அரசியல் பொருளாதாரம், சமூகம் என பலவற்றின் தரப்பிலும் மிக மோசமான கருத்துகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வருவதால், அவரது தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் சமீபத்திய வாரங்களில் சீனா மீதான தாக்குதலை தீவிரபடுத்தியுள்ளனர்.

குறிப்பாக சீனாவின் தூதர்கள், அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகளை குறி வைத்துள்ளனர்.

டிரம்ப் ஜெயிப்பாரா?

டிரம்ப் ஜெயிப்பாரா?

மேலும் சில அமெரிக்கா அதிகாரிகள் டிரம்பை இழக்க நேரிடும் என்று கவலை கொள்கின்றனர். மாற்றமுடியாத மாற்றங்களை உருவாக்க முயற்சிக்கின்றனர் என்று இதனை அறிந்தவர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சீனாவின் தலைவரான ஜி ஜின்பிங் தனது சொந்த அரசியல் சக்தியை பலப்படுத்திக் கொள்வதற்கும், அடிப்படை சுதந்திரங்களை உடைப்பதற்கும், சண்டையினை தூண்டி விடுகிறார், மேலும் இவ்வாறு செய்வதன் மூலம் வாஷிங்டனில் அணுகுமுறையை கடுமையாக்கியுள்ளார்.

இது சாதனை

இது சாதனை

ஆரம்பத்தில் இருந்தே சீனாவுடனான உறவை மாற்றுவதாக டிரம்ப் சபதம் செய்துள்ளார். ஆனால் வர்த்தகத்திற்கு வரும்போது இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரு நாடுகளில் வர்த்தக போரில் பேச்சுவார்த்தை ஒப்பந்தம் சில உதவியாளர்களால் கையொப்பமிட்ட சாதனை என்று பாராட்டப்பட்டது.

சீன தூதரகம் மூடல்

சீன தூதரகம் மூடல்

இப்படி படிப்படியாக வளர்ந்து வரும் வர்த்தகபோருக்கு மத்தியில், பிரச்சனைகளும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. ஒரு கட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான விமான போக்குவரத்து தடை, அதன் பிறகு அமெரிக்காவில் உள்ள சீனாவின் தூதரகத்தினை மூட உத்தரவிட்டது.

சீனா பதிலடி

சீனா பதிலடி

இதே சீனாவும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனாவின் செங்டு நகரிலுள்ள அமெரிக்க தூதரகத்தை மூடுமாறு சீன அரசு உத்தரவிட்டது. அமெரிக்காவுக்கு சொந்தமான அறிவுச் சொத்துகளை சீனா திருடுவதாகவும், இதனால் இந்த அதிரடியான முடிவு எடுக்கப்பட்டதாகவும் அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்திருந்தார்.

அதிகரித்து வரும் மோதல்

அதிகரித்து வரும் மோதல்

இப்படி தொடர்ச்சியான பல்வேறு முக்கிய பிரச்சனைகளின் காரணமாக அமெரிக்கா - சீனா இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.வர்த்தகம், கொரோனா வைரஸ் பரவல், ஹாங்காங் விவகாரம் உள்ளிட்ட பலதரப்பட்ட பிரச்சனைகளில் சீனா மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு எண்ணற்ற குற்றச்சாட்டுகளையும் தடைகளையும் விதித்து வருகிறது.

ஆய்வகங்கள் இலக்கு

ஆய்வகங்கள் இலக்கு

எல்லாவற்றையும் விட, சீன ஹேக்கர்கள் கோவிட் 19 தடுப்பூசிகளை தயாரித்து வரும் ஆய்வகங்களை இலக்கு வைத்திருப்பதாக அமெரிக்காவின் நீதித்துறையே குற்றம் சாட்டியது. இப்படி பலவாறு பரவி வரும் பிரச்சனைகளினால் அமெரிக்கா சீனா இடையேயான பிரச்சனை இன்னும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+