அமெரிக்க அரசியலில் அதிரடி கிளப்பும் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசுவாமி மற்றும் அவரது மனைவி அபூர்வா தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்துள்ளது. பிப்ரவரி 4, 2026 அன்று இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு சவித்ரி என்று பெயரிடப்பட்டுள்ளது. தாயும் குழந்தையும் நலமுடன் இருப்பதாகவும், ஒஹாயோ மக்கள் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள நண்பர்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் விவேக் தனது ட்விட்டர் பதிவில் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.
விவேக் ராமசுவாமி, டிரம்ப்-ன் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட போது அமெரிக்காவில் வாழும் இந்திய மக்கள் மற்றும் தொழிற்துறையினர்களின் நம்பிக்கையை பெற்றதில் முக்கிய பங்கு வகித்தார். விவேக் ராமசுவாமி-க்கு முக்கிய பதவி கொடுக்கப்பட்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடக்காமல் போனது. ஆனால் டிரம்ப் உருவாக்கிய DOGE அமைப்பில் விவேக் ராமசுவாமி முக்கிய நபராக நியமிக்கப்பட்டார்.

ஆனால் விவேக் ராமசுவாமி அரசு நிர்வாகத்தில் பணியாற்றுவதை விட நேரடி அரசியலில் இறங்குவதை விரும்பினார். இதன்படி தற்போது ஒஹாயோ மாநில கவர்னர் தேர்தலில் போட்டிப்போட்ட தயாராகி வருகிறார்.
விவேக் ராமசுவாமி ஒஹாயோ மாநில கவர்னர் தேர்தல் 2026இல் ரிபப்ளிகன் கட்சியின் முன்னணி வேட்பாளராக உள்ளார். பிப்ரவரி 4 அன்று பிரைமரி பாலட் பெறுவதற்கு தேவையான 1,000 கையெழுத்துகளை விட இரு மடங்கு சமர்ப்பித்துள்ளார். தற்போதைய கவர்னர் மைக் டெவைன் பதவிக்கால வரம்பு காரணமாக போட்டியிட முடியாததால் அம்மாநிலத்தில் "ஓப்பன் சீட்" தேர்தல் நடைபெறுகிறது. இந்திய வம்சாவளி அரசியல்வாதியாக விவேக் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார்.
விவேக் ராமசுவாமி 1985ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சின்சினாட்டியில் இந்திய குடும்பத்தில் மகனாக பிறந்தார். ஹார்வர்ட் மற்றும் யேல் பல்கலைக்கழகங்களில் படித்து சட்டம் மற்றும் வணிகத்தில் பட்டம் பெற்றார்.
ரோய்வாண்ட் சயின்சஸ் (Roivant Sciences) நிறுவனத்தை நிறுவி, 40 வயதுக்கு முன்பே பில்லியனரானார். "Woke, Inc." மற்றும் "Nation of Victims" போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார்.
2015இல் டாக்டர் அபூர்வா-வை திருமணம் செய்துகொண்டார். யேல் பல்கலைகழகத்தில் அபூர்வா மருத்துவ படிப்பு படித்துக் கொண்டிருந்த போது விவேக் சட்டம் படித்தார், இப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இப்போது இரு மகன்களுடன் மூன்றாவது குழந்தையாக மகள் பிறந்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications