சிங்கப்பூர்: ஈரான் மற்றும் சவுதி அரேபிய நாடுகளுக்கு மத்தியிலான பிரச்சனையால் சர்வதேச எண்ணெய் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை 2 சதவீதம் அதிகரித்துள்ளது.
மரணத் தண்டனையும்.. போராட்டமும்..
சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 47 தீவிரவாதிகளுடன், ஷியா பிரிவை சேர்ந்த மதகுரு ஷேக் நிமிர் அல்-நிமிர் என்பவருக்கு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானில் போராட்டம் வெடித்தது.
உறவு முறிந்தது..
இப்போராட்டத்தில் தலைநகர் தெஹ்ரானில் உள்ள சவுதி அரேபியா தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு எரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சவுதி அரேபியா ஈரான் நாட்டுடனான உறவை முழுமையாக ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்தது.
சவுதி அரேபியாவின் திடீர் மாற்றம்..
இந்நிலையில் இரு நாடுகளில் அமைதி நிலவவும், சிரியா மற்றும் ஏமென் நாடுகளிலும் தாக்குதல் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காகச் சவுதி அரேபியா, ஈரானுடன் உறவை உயிர்பெறச் செய்வதாகத் திங்கட்கிழமை தெரிவித்தது.
விலை உயர்வு..
கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய நாடுகளின் மத்தியிலான இத்தகைய பிரச்சனையால் சர்வதேச எண்ணெய் சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய்யின் விலை 2.5 சதவீதம் வரை அதிகரித்தது. இதனால் திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 1 டாலர் வரை அதிகரித்து 38.50 டாலராக விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் அமெரிக்க WTI சந்தை 2.05 சதவீதம் வரை அதிகரித்துக் காணப்பட்டது.
சீன பங்குச்சந்தை
கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஆசிய சந்தையில் சீன பங்குச்சந்தை கணிசமாகப் பாதிக்கப்பட்டது. சீன சந்தையின் வீழ்ச்சியால் இந்திய சந்தையை அதிகளவில் பாதிக்கப்பட்டது.
More From GoodReturns

ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாமலேயே போரை முடிக்க போகிறாரா டிரம்ப்? என்ன சொல்லி இருக்காரு பாருங்க!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

ஈரான் போர்: மூக்கறுபட்ட பாகிஸ்தான்..!! அப்போ டிரம்ப் சொன்னது என்ன ஆச்சு?

ஈரான்-க்கு அமெரிக்கா, இஸ்ரேல் விட பெரிய ஆபத்து இதுதான்.. ஈரான் மக்கள் பரிதவிக்கும் நிலை வரலாம்..!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

இண்டர்நெட் முதல் சமையல் எண்ணெய் வரை: ஈரான் போரால் அடுத்தடுத்து கிளம்பும் பூதம்!!

திடீரென பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய Shell நிறுவனம்..!! வாகன ஓட்டிகளே கவனம்..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

சிலிண்டர் விலை: 3 மாதங்களில் இல்லாத விலை உயர்வு..!! எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பால் அதிர்ச்சி..!!

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications