2 வருடங்களுக்கு பின் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க ஒப்புக்கொண்டது OPEC அமைப்பு.
உலகளவில் தங்கத்திற்கு அடுத்தாக அதிகளவில் வர்த்தகம் செய்யப்படுவது கச்சா எண்ணெய், 2 வருடங்களுக்கு முன் பல்வேறு காரணங்களுக்காக உலக நாடுகள் அதிகளவிலான கச்சா எண்ணெயை உற்பத்தி செய்து சந்தை வர்த்தகத்திற்குக் கொண்டு வந்தது.
இதனால் 100 டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் தற்போது 45 டாலர் வரை குறைந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் அதன் வர்த்தகத்தை மட்டும் நம்பியிருக்கும் பல நாடுகள் வருவாய் மற்றும் நிதிநிலையில் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பான OPEC, புதன்கிழமை விய்யனாவில் இருக்கும் தனது தலைமையகத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறித்த முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தியது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் உற்பத்தி நாடுகள் மத்தியில் மாறுப்பட்ட கருத்துக்கள் நிலவினாலும், கடைசியில் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க ஒப்புக்கொண்டது.
1.2 மில்லியன் பேரல்
OPEC அமைப்பின் தலைமையகமான விய்யனாவில் நடத்த கூட்டத்தில் சவுதி அரேபியா, ஈரான், ஈராக் உட்பட 13 நாட்கள் கலந்துக்கொண்ட இக்கூட்டத்தில் அனைத்து நாடுகளும் இணைந்து ஒரு நாளுக்கு 1.2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளது.
உற்பத்தி அளவுகள்
தற்போது OPEC அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் ஒரு நாளுக்கு 33.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிலையில் இந்த அளவுகளில் 1.2 மில்லியன் பேரல் குறைக்கப்பட்டு இனி 32.5 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை மட்டும் உற்பத்தி செய்யப்படும்.
இதனால் கச்சா எண்ணெய் சந்தையில் இருப்பு அளவுகள் மட்டும் அல்லாது விலைகளிலும் மாற்றம் ஏற்படும்.
முக்கிய நாடுகள்
இந்த உற்பத்தி குறைப்பில் சவுதி அரேபியா, ஈராக் மற்றும் குவைத் நாடுகள் அதிகளவிலான பங்கு வகிக்கிறது.
ஈரான் மற்றும் ஈராக் நாடுகள் உள்நாட்டு போர் மற்றும் வர்த்தகத் தடை நீக்கம் ஆகியவற்றிக்குப் பின் தனது நிதிதேவைக்காக உற்பத்தியை உயர்த்த திட்டமிட்டு வந்த நிலையில், கடந்த வாரம் சவுதி அரேபியே இரு நாடுகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தி உற்பத்தி குறைப்பிற்கு ஒப்புதல் பெற்றுள்ளது.
விலை உயர்வு
OPEC அமைப்புகளில் இருக்கும் நாடுகள் தங்களது உற்பத்தியை குறைக்க ஒப்புக்கொண்ட நிலையில் இன்று சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் WTI கச்சா எண்ணெய் விலை 8.52 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 49.44 டாலராக உயர்ந்துள்ளது.
மேலும் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 8.10 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 50.47 டாலராக உயர்ந்து.
நிலையான விலை அல்ல
இந்த உயர்வு அடுத்த வாரங்களில் குறையலாம். காரணம், OPEC அமைப்பில் இல்லாத கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளான ரஷ்யா போன்றவைகளுடன் உற்பத்தி குறைப்புக் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இதன் அடிப்படையில் தான் கச்சா எண்ணெய் விலை மாறுப்படும்.
சீனா தான் 'ராஜா'
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications