ஈரான் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள தாக்குதல் மத்திய கிழக்கு நாடுகளில் பெரிய அளவிலான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பதற்றம் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைகளையும் உயர்த்தி இருக்கிறது.
ஈரானின் குறிப்பிட்ட சில பகுதிகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பெரிய அளவிலான பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த தகவல் வெளியானதை அடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் உயரத் தொடங்கி இருக்கின்றன.

ஈரானின் அணுசக்தி திட்டம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பெரிய அளவிலான கவலைகளை ஏற்படுத்தி வருகிறது. ஈரான் பயங்கரமான அணு ஆயுதங்களை வைத்திருப்பதாகவும் அது இந்த உலகிற்கே பெரிய ஆபத்து என்றும் அமெரிக்கா கூறி வருகிறது. இந்த நிலையில் ஈரானின் அணுசக்தியை திட்டங்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டு வந்தது.
ஆனால் இந்த பேச்சு வார்த்தையில் இதுவரை எந்த ஒரு உடன்பாடும் எட்டப்படவில்லை ஈரானின் அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்க அரசு இதுவரை ஐந்து கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்தி முடித்து இருக்கிறது .ஆனால் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் இந்த பேச்சுவார்த்தையை தடுத்து நிறுத்தி இருக்கிறது.
சில தினங்களுக்கு முன்னர் ஈரானின் அணு ஆயுத கிடங்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க உளவுத்துறை சந்தேகம் தெரிவித்தது. இதனை அடுத்து மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்கர்கள் உடனடியாக நாடு திரும்பும் படி அமெரிக்கா அரசு அறிவித்தது. இந்த சூழலில் ஈரானின் ராணுவ தளங்கள் மற்றும் அணு ஆயுத பகுதிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துதியது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த தகவல் வெளியானதை அடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 12 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. அமெரிக்காவின் முக்கிய சந்தையான West Texas Intermediateஇல் ஒரு பேரல் பிரெண்ட் கச்சா எண்ணெய் 12.6 சதவீதம் உயர்ந்து 76.61 டாலர்களாகவும் Brent North Sea கச்சா எண்ணெய் 12 சதவீதம் விலை உயர்ந்து 77.77 டாலர்களாகவும் விற்பனையாகின்றன.
இந்த போர் பதற்றம் தொடர்ந்தால் அடுத்தடுத்த நாட்களில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும். அவ்வாறு விலை உயரும் போது இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும். இது சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்வதற்கும் வாய்ப்பு ஏற்படுத்தி தரும்.


Click it and Unblock the Notifications