அதிரடியாய் குறைந்த கச்சா எண்ணெய் விலை.. மோடிஜி பெட்ரோல் டீசல் விலை குறையுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிங்கப்பூர் : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்தவாறே இருக்கிறது. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்த கச்சா எண்ணெய் விலையை, தற்போது தொட்டுள்ளது கவனிக்கதக்கது.

 

இதற்கு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பே காரணம் என்றும் கருதப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவில் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுவதே இதற்கு காரணம் என்றும் கருதப்படுகிறது.

 
அதிரடியாய் குறைந்த கச்சா எண்ணெய் விலை.. மோடிஜி பெட்ரோல் டீசல் விலை குறையுமா?

அமெரிக்கா ஈரான், வெனிசுலா நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா தடை விதித்து இருந்தது. இந்த நிலையில் கச்சா எண்ணெய் விநியோகம் குறைந்து விலையும் அதிகரித்தது. இதனால் நடப்பு ஆண்டில் கச்சா எண்ணெய் விலை சுமார் 25 சதவிகிதம் வரை அதிகரித்தது அனைவரும் அறிந்த ஒரு விஷயமே.

எனினும் தற்போது அமெரிக்க இந்த நிலையை சீர்படுத்த தானே களத்தில் குதித்துள்ளது. ஆமாங்க, அமெரிக்கா கச்சா எண்ணெய் உற்பத்தி கடந்த வாரத்தில் ஒரு நாளைக்கு 12.3 மில்லியன் பேரல்கள் என்ற அளவுக்கு உயர்ந்தது. இருப்பினும் கச்சா எண்ணெய் இருப்பு 3,00,000 லட்சம் பேரல்கள் குறைந்து, 476.49 மில்லியன் பேரல்களாக குறைந்தது.

இந்திய அரசு பொறுப்பேற்கும் போதே நிதி அமைச்சரான முதல் பெண்... Nirmala Sitharaman..! இந்திய அரசு பொறுப்பேற்கும் போதே நிதி அமைச்சரான முதல் பெண்... Nirmala Sitharaman..!

அதோடு சவுதி அரேபியாவிலும் நடப்பு மே மாதத்தில் உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனெனில் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யப்படுவது தடை செய்யப்பட்டதை அடுத்து, அதை ஈடுசெய்வதற்காக உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் விலையேற்றத்தை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட இந்த முயற்சி, மிக நன்றாகவே கைகொடுத்தது என்றே கூறலாம். ஆட ஆமாங்க கடந்த நவம்பர் மாதத்தில் இருந்த விலையானது, (55 - 56) என்ற விலை தற்போது 56.12 என்று வர்த்தகமாகி வருகிறது. இது இன்று காலை 55.66 என்ற விலை வரைக்கும் வர்த்தகமாகி தற்போது சற்று அதிகரித்துள்ளது கவனிக்கதக்கது.

இந்த நிலையில் அமெரிக்கா சீனா இடையே நிலவி வரும் பிரச்சனையும் தற்போதைக்கு முடிவதாக தெரியவில்லை. இந்த நிலையில் அடுத்த முறை நடக்கவிருக்கும் ஒபெக் நாடுகள் கூட்டத்தில் இந்த உற்பத்திக்கு மேலும் அனுமதி கிடைக்குமா? இல்லை உற்பத்தி குறைக்கப்படுமா என்பது பின்னர் தான் தெரிய வரும். இந்த நிலையில் அவ்வாறு உற்பத்தி குறைக்கப்படும் எனில் விலை மீண்டும் அதிகரிக்கப்படலாம் என்றும், இல்லையேல் இந்த விலையிறக்கம் தொடரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு இந்த நிலையில் அமெரிக்காவின் ஜி.டி.பி மதிப்பு, இன்று மறு மதிப்பீடு செய்யப்படுகிறது என்ற செய்திகளும் வெளியாகி வந்தன. இதனால் இது கச்சா எண்ணெய் விலையில் எதிரொலிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்தே இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலையிலும் இந்த மாற்றம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Oil set for biggest monthly fall since November

Oil prices fell on Friday and Its were track on their biggest monthly fall since November as trade conflicts spread and U.S. crude output returned to record levels.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X