தெஹ்ரான் : நம்ம வடிவேல் கதைபோல ஆகிடுச்சு.. ஆமாங்க ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் கப்பல் காணமல் போய்விட்டதாம். இது நம்ம வடிவேல் சொல்லற மாதிரி ஐயா என் கிணத்த காணல, கிணத்த காணல என்கிற மாதிரி இருக்குல்ல..
ஆமாங்க.. நம்ம வடிவேல் காமெடி மாதிரி தான், ஊருல என்ன பிரச்சனை நடந்தாலும், அதற்கு வடிவேல் தான் காரணங்கிற மாதிரி, பாரசீக வளைகுடா பகுதிகளில் எந்த கப்பலில் எந்த பிரச்சனையானலும் அடுத்த டார்கெட் நம்ம ஈரானா தான் இருக்கும்.
அட ஆமாங்க.. எங்க எந்த பிரச்சனையா இருந்தாலும், அமெரிக்கா ஈரானையே குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
ஈரான் தவிர இதை வேறு யாரும் செய்ய முடியாது?
தொடர்ந்து பாரசீக வளைகுடா பகுதிகளில் என்ன பிரச்சனை நடந்தாலும், அதற்கு ஈரான் தான் காரணம் என்று குற்றம் சாட்டி வரும் அமெரிக்காவுக்கு வேறு காரணமே வேண்டாம். தற்போது நேரிடையாக ஈரானை எச்சரித்துள்ளது அமெரிக்கா. அதோடு கண்டிப்பாக இது ஈரானுடைய வேலையாகத் தான் இருக்கும் என்றும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது அமெரிக்கா. இதனால் அமெரிக்கா -ஈரான் இடையேயான மோதல் காரணமாக இன்னும் வலுவடைந்துள்ளது. மேலும் பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் தொடர்ந்து பதற்றமான சூழலே நீடித்து வருகிறது.
தொடர்ந்து நிலவி வரும் பிரச்சனை?
கடந்த மே மாதம் பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டிருந்த வெளிநாட்டு எண்ணெய் கப்பல்கள் மீது, தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டன. இதற்கே இன்னும் முடிவு தெரியப்படாத நிலையில், இதன் பின்னணி என்ன என்றும் அறியப்படாத நிலையில், ஈரான் தான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தது. வழக்கம் போல ஈரான் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. எனினும் இன்று வரை இந்த பிரச்சனைக்கு யார் காரணம் என்று கண்டறியப்படவில்லை.
ஐக்கிய அரபு அமீரகத்தின் கப்பல் காணவில்லை
இந்த நிலையில் தான் ஹார்முஜ் ஜலசந்தி வழியாக சென்றுகொண்டிருந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் கப்பல் திடீரென மாயமானது எப்படி? அதுவும் எண்ணெய் கப்பல் எப்படி என்று புரியாத புதிராக உள்ளது. அதோடு இது பாரசீக வளைகுடா பகுதிகளில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆமாங்க.. துபாயில் இருந்து புஜைரா துறைமுகம் நோக்கி சென்றுகொண்டிருந்த ரியா எனப்படும், எண்ணெய் கப்பல் கடந்த சனிக்கிழமை இரவு மாயமானதாக தவகல்கள் வெளியாகியுள்ளன.
சத்தியமா ஈரான் தான் இதை செய்திருக்கும்?
ஒரு புறம் ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றி இருக்கலாம் என அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஈரான் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்றாலும், இதற்கு முன்னரே கடந்த சில தினங்களுக்கு முன்பு இங்கிலாந்து நாட்டின் பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பலை ஈரான் ராணுவத்துக்கு சொந்தமான படகுகள் கைப்பற்ற முயற்சித்தாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இந்த நிலையில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது சற்று பதற்றத்தை கிளப்பியுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications