ஓமனில் அடுத்த 6 மாதத்திற்கு ஊடகம், ஐடி, மார்கெட்டிங், இன்சூரன்ஸ் மற்றும் விமானப் போக்குவரத்து போன்ற 10 துறைகளில் வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கு எடுக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய தடையானது உடனடியாக அமலுக்கு வருவதாகவும், இதன் மூலம் ஓமன் குடிமக்களில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் ஞயாயிற்றுக்கிழமை மனித ஆற்றலுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் கருத்து
வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கு எடுப்பதற்கு விதித்துள்ள தடையினால் உள்நாட்டு ஊழியர்களைப் பணிக்கு அதிகமாக எடுப்பார்கள் என்று அமைச்சர் அப்துல்லா அல் பக்ரி தெரிவித்துள்ளார்.
வேலை இல்லா பட்டதாரிகள்
2017-ம் ஆண்டுக் கணக்கின் படி ஓமனில் 60,000 வேலை இல்லா பட்டதாரிகள் உள்ளனர் என்று மனித ஆற்றலுக்கான அமைச்சகம் கூறியுள்ளது.
ஓமன் அரசு
ஓமன் அரசு டிசம்பர் மாதம் 25,000 புதிய வேலை வாய்ப்பினை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகச் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் அறிவித்தது. சென்ற ஆண்டு மட்டும் 40 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு வேலை வாய்ப்பின்மையில் ஓமன் சிக்கியது.
மேலும் ஓமன் அரசு 60 சதவீத வேலை வாய்ப்பினை பொதுத் துறை நிறுவனங்களில் அளிக்க உள்ளதாகவும், தனியார் நிறுவனங்கள் தங்களது நாட்டின் மக்களைப் பணிக்கு எடுக்கும் போது ஊக்கத்தொகைகள் போன்றவற்றையும் அளிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
வருங்காலத் தலை முறை
தங்களது வருங்காலத் தலை முறைக்காகத் தனியார் நிறுவனங்கள் அதிக வேலை வாய்ப்பினை உருவாக்க வேண்டும் என்று ஓமன் அரசு அறிவிப்பு என்றை வெளியிட்டுள்ளது.
பட்டதாரிகளுக்கு மிக வேகமாக வேலை வாய்ப்பினை உருவாக்கும் நோக்கத்தில் மனித ஆற்றல் துறை அமைச்சகம் ஓமனில் செயல்பட்டு வருகிறது. வேலைக் கிடைக்காமல் இளம் தலைமுறையினைத் துவண்டு போயுள்ளதாகவும் அதை முழுமையாகக் குறைப்பதற்கான பணிகளைத் துவங்கியுள்ளதாகவும் அரசு வட்டாரம் கூறுகின்றது.
தற்காலிக திட்டம்
வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தடை என்பது குறைந்த காலத் திட்டத்திற்கு மட்டுமே சாத்தியம் என்றும் ஓமனின் நீண்ட காலத் திட்டத்திற்கு இது சாத்தியப்படாது என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஊழியர்கள் எண்ணிக்கை
ஓமனில் சென்ற ஆண்டுச் செப்டம்பர் வரை 2,37,900 உள்நாட்டு ஊழியர்கள் தனியாக நிறுவனங்களில் பணிபுரிந்து வருவதாகவும், வெளிநாட்டில் இருந்து 10,87,000 ஊழியர்கள் பணிபுரிவதாகவும் தரவுகள் கூறுகின்றன.
எதனால் இந்த அதிரடி நடவடிக்கை?
சமுக வலைத்தளங்களில் வேலை வாய்ப்பினை அதிகரிப்பது குறித்துச் செய்திகள் அதிகளவில் பரவுவதைக் கண்காணித்த ஓமன் அரசு தற்காலிகமாக வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தடை வித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications