Omicron கிரிப்டோகரன்சி: 70 டூ 711 டாலர் வரை உயர்வு.. முதலீட்டாளர்களுக்கு 10 மடங்கு லாபம்..!

உலக நாடுகளில் புதிதாகப் பரவி வரும் B.1.1.529 கொரோனா வைரஸ்-க்கு உலகச் சுகாதார அமைப்பு வெள்ளிக்கிழமை ஒமிக்ரான் எனப் பெயரிட்டது. ஒமிக்ரான் வைரஸ் தொற்றுக் காரணமாக உலக நாடுகளில் முதலீட்டுச் சந்தை பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்ட காரணத்தால் முதலீட்டாளர்கள் அதிகளவிலான இழப்பை எதிர்கொண்டனர்.

இந்த நிலையில் வழக்கம் போல் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டைக் காப்பாற்றத் தங்கம் மற்றும் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யத் துவங்கினர். கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து சரிந்து வந்த கிரிப்டோகரன்சி சந்தை ஒமிக்ரான் வைரஸ் பரவலை தொடர்ந்து சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.

இதற்கிடையில் உலகச் சுகாதார அமைப்பு அறிவித்த ஒமிக்ரான் பெயரிலேயே அறிமுகம் செய்யப்பட்ட ஒரு கிரிப்டோகரன்சி சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.

ஒமிக்ரான் (OMIC) கிரிப்டோகரன்சி

ஒமிக்ரான் (OMIC) கிரிப்டோகரன்சி

ஒமிக்ரான் (OMIC) கிரிப்டோகரன்சி குறித்துப் பெரிய அளவில் தெரியாத நிலையில் திடீர் அறிமுகத்தின் மூலம் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்தது. இதனால் வழக்கம் போல் முதலீட்டாளர்கள் தாறுமாறாக முதலீடு செய்த காரணத்தால் அதிகப்படியான வளர்ச்சியை விடுமுறை நாட்களில் பதிவு செய்தது.

கிரிப்டோ சந்தை

கிரிப்டோ சந்தை

இதற்கு ஏற்றார் போல் மொத்த கிரிப்டோசந்தையும் பங்குச்சந்தை சரிவால் கிரிப்டோ சந்தைக்குத் திரும்பியது. ஒமிக்ரான் கிரிப்டோகரன்சி பாண்ட் அடிப்படையில் துவங்கப்பட்ட ஒரு கிரிப்டோகரன்சி, இந்தக் கிரிப்டோகரன்சி எதிரியம் ஸ்கேலிங் டெக்னாலஜியான ஆர்பிட்ரம் மூலம் உருவாக்கப்பட்டு உள்ளது.

 B.1.1.529 கொரோனா வைரஸ்

B.1.1.529 கொரோனா வைரஸ்

இந்த ஒமிக்ரான் கிரிப்டோகரன்சிக்கும், B.1.1.529 கொரோனா வைரஸ்-க்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இத்தகைய பெயர் வைக்கப்பட்டத்து. சமீபத்தில் நெட்பிளிக்ஸ் தளத்தில் பிரபலமான ஸ்க்விட் கேம் பெயரில் ஸ்க்விட் என்ற கிரிப்டோகரன்சி துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

10,00,000 ஒமிக்ரான்

10,00,000 ஒமிக்ரான்

இந்த ஒமிக்ரான் 10,00,000 கிரிப்டோகாயின்களை மட்டுமே உருவாக்கும் திட்டத்துடன் இருக்கும் காரணத்தால் அறிமுகத்தின் முதலே இதற்கு டிமாண்ட் அதிகமாக இருந்தது, இதனால் ஒமிக்ரான் பெயர் பிரபலமான உடனேயே இதன் விலை ராக்கெட் வேகத்தில் உயரத் துவங்கியது.

70 டூ 711 டாலர் வரை

70 டூ 711 டாலர் வரை

வெள்ளிக்கிழமை காலையில் அதாவது 26ஆம் தேதி காலையில் வெறும் 64 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டு வந்த ஒமிக்ரான் இதேநாள் மாலையில் 170 டாலரை கடந்தது, திங்கட்கிழமை காலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 711.09 டாலர் வரையில் உயர்ந்தது.

10 மடங்கு வளர்ச்சி

10 மடங்கு வளர்ச்சி

இதன் மூலம் வெறும் 3 நாட்களில் ஒமிக்ரான் கிரிப்டோகரன்சி சுமார் 10 மடங்கு வளர்ச்சியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது. மேலும் ஒமிக்ரான் கிரிப்டோகரன்சி பல்வேறு சொத்துக்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது, இதில் முக்கியமாக USDC போன்ற நிலையான கிரிப்டோகரன்சியை அடிப்படையாகக் கொண்டு உள்ளதால் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகப்படியான வரவேற்பு கிடைத்துள்ளது.

பிட்காயின் மதிப்பு

பிட்காயின் மதிப்பு

கிரிப்டோ.காம் தளத்தின் படி ஒமிக்ரான் கிரிப்டோகரன்சி தற்போது 372.12 டாலர் அளவில் சரிந்துள்ளது. மேலும் பிட்காயின் மதிப்பு 4.94 சதவீதம் உயர்ந்து 57,022.65 டாலருக்கும், எதிரியம் 5.99 சதவீதம் உயர்ந்து 4,323.81 டாலருக்கும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+