பெய்ஜிங்: இன்றைய நடைமுறையில் ஆன்லைன் ஷாப்பிங் பழக்கம், உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துள்ளது, குறிப்பாகச் சீனாவில் மிகவும் அதிகம்.
இந்நிலையில் சீனாவின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அலிபாபாவின் கிளை நிறுவனமான Taobao என்னும் நிறுவனம் விந்தணுக்களை விற்று வருகிறது. நீங்கள் படித்தது சரி தான் 'விந்தணுக்கள்'.
மக்கள் ஆர்வம்
விந்தணுக்களை அளிப்போருக்கு Taobao நிறுவனம் 500 முதல் 700 டாலர் வரை அளிப்பதாக அறிவித்துள்ளது. இதனால் சீனாவில் விந்தணுக்களை அளிக்க ஆண்கள் வரிசைக்கட்டி நிற்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் 1000த்திற்கும் மேற்பட்டோர் இதற்காக முன்பதிவு செய்துள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிற சேவைகள்
இந்த ஆன்லைன் விற்பனை நிறுவனம் தந்தைமை மற்றும் விந்து கருவுறுதல் சோதனைகளை மக்களுக்கு வழங்க உள்ளது.
Taobao நிறுவனம்
என்ன நிறுவனம்டா இது எனத் தோன்றும் போது.. நமக்குச் சில தகவல்கள் கிடைத்தது.
உலகிலேயே அதிகளவில் ஆன்லைன் வர்த்தகம் செய்து வரும் அலிபாபா, Taobao நிறுவனத்தை வேண்டும் என்றே திட்டமிட்டு உருவாக்கியுள்ளது. ஏன் இப்படி??
ஏன் இப்படி??
நாம் பொதுவாகச் சமுகத்தில் செய்யாத, புழக்கத்தில் இல்லாதவற்றை விற்பதற்காகவே அலிபாபா இந்நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.
இத்தளத்தில் விற்கப்படும் சில பொருட்களின் விபரம் உங்களுக்காக.. தாய்ப் பாலில் செய்யப்பட்ட சோப், பெண்களுக்காக வாடகை பாய் பிரன்ட் போன்ற இத்தளத்தில் மிகவும் பிரபலமானவை. இதிலிருந்தே கணக்குபோட்டுக் கொள்ளுங்கள்.
22,017 பேர்
Taobao நிறுவனத்தின் விளம்பரத்தை ஏற்றுச் சீனாவில் சுமார் 22,017 பேர் தங்களது விந்தணுக்களை விற்றுள்ளனர். இவை சீனா முழுவதும் உள்ள விந்தணு வங்கியில் கிடைக்கும் எனவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதை எப்படிப் பார்க்க வேண்டும்..
குழந்தையின்மை இல்லாத தம்பதிகளிடம் செயற்கை கருவுற்றல் பற்றிப் பேசினால் சிலருக்கு அழுகையும், சிலருக்குக் கோபம் வரும். இதற்கு முக்கியக் காரணம் இந்தியாவில் செயற்கை கருவுற்றல் பற்றிப் போதுமான விழிப்புணர்வு இல்லாததால் தான்.
சினாவில் இதற்கான விழிப்புணர்வு அதிகம். எனவே இதை யாரும் குறைகூற முடியாது. Taobao நிறுவனத்தின் இந்த முயற்சி இந்தியாவில் நிகழ சில வருடங்கள் ஆகலாம், ஆனால் கண்டிப்பாக இது நிகழும் என்பது உறுதி.
பிளிப்கார்ட்.. நீங்க செய்யுங்களேன்..
ஆன்லைன் ஷாப்பிங்!
இத்தகைய நிலையில் ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் விற்பனை தளத்தின் மூலம் கையில் கிடைப்பது எதுவாக இருந்தாலும் விற்று விடலாம் என நம்பிக்கை மக்கள் மத்தியில் உதித்துள்ளது.
இதனை வாங்கவும் பல பேர் சுற்றுகிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.
சீனாவும் இந்தியாவும்...
ஆன்லைன் ஷாப்பிங் வர்த்தகத்தில் சீனாவை ஒப்பிடும் போது இந்தியா 80இல் ஒரு பங்கு என ஆய்வு நிறுவனங்கள் கூறுகிறது.


Click it and Unblock the Notifications