OPEC அமைப்பின் திடீர் முடிவால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்..!

வியன்னா, ஆஸ்திரியா: கடந்த 2 வருடமாக அமெரிக்கா சந்தை சார்பில் வர்த்தகத்திற்கு வரும் கச்சா எண்ணெய்யின் போட்டியை சமாளிக்கச் சவுதி அரேபியா நாடுகள் உட்படப் பல வளைகுடா நாடுகள் அதிகளவிலான கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து சந்தையில் வர்த்தகத்திற்குக் கொண்டு வந்தது. இதனால் அமெரிக்காவின் எண்ணெய் வர்த்தகம் கணிசமாகப் பாதித்தது.

அமெரிக்கா உடனான போட்டியில் வெற்றி பெற்றதோ சவுதி தான், ஆனால் வெற்றிக்கு பின்னால் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது வளைகுடா நாடுகள். இதில் மிகப்பெரிய அடி சவுதி அரேபியாவிற்கு.

பாதிப்பை தாங்க முடியாத சவுதி அரேபியே தற்போது வளைந்து கொடுத்தது

உற்பத்தி அளவு

உற்பத்தி அளவு

சர்வதேச நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான OPEC அமைப்பு, புதன்கிழமை நடத்திய கூட்டத்தில் 2008ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாகக் கச்சா எண்ணெய் உற்பத்தி அளவுகளைக் குறைக்க முடிவு செய்துள்ளது.

வரலாறு காணாத விலை சரிவு..

வரலாறு காணாத விலை சரிவு..

சந்தையில் கச்சா எண்ணெய் இருப்பு அளவிற்கு அதிகமாக இருந்ததால் இதன் விலை அதிகளவில் குறையத் துவங்கியது. 2 வருடத்திற்கு முன்பு ஒரு பேரல் கச்சா எண்ணெய் 65 டாலராக இருந்த கச்சா எண்ணெய் தற்போது 44 டாலராக இருக்கிறது.

நிதி நெருக்கடி..

நிதி நெருக்கடி..

இந்த விலை சரிவினால் கச்சா எண்ணெய் உற்பத்தியில் முன்னணியாக இருக்கும் சவுதி அரேபியா நாடு தற்போது மிகப்பெரிய நிதி நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது.

தீர்மானம்

தீர்மானம்

இத்தகையை மோசமான சூழ்நிலையில் தான் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான OPEC அமைப்புப் புதன்கிழமை உற்பத்தி அளவுகள் குறித்துத் தீர்மானம் செய்ய முக்கியக் கூட்டத்தை நடத்தியது.

சவுதி அரேபியா- ஈரான்

சவுதி அரேபியா- ஈரான்

கடந்த ஒரு வருடகாலமாகக் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க வேண்டும், இல்லையென்றால் மிகப்பெரிய சிக்கலில் சிக்கிக்கொள்வோம் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்த ஈரான் தரப்பிற்கு முதல் முறையாகச் சவுதி அரேபியா நாடு செவி சாய்த்துள்ளது.

OPEC அமைப்பில் சவுதி அரேரியா நாட்டின் ஆதிக்கம் அதிகம்.

 

கச்சா எண்ணெய் சந்தை

கச்சா எண்ணெய் சந்தை

OPEC அமைப்புக் கடைசியாக மிகச்சிறந்த முடிவை எடுத்துள்ளது. கடந்த 2.5 வருடமாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த உற்பத்தி அளவை தற்போது குறைக்க முடிவு செய்துள்ளகு. இதனால் கச்சா எண்ணெய் சந்தை ஸ்திரமான நிலையை நோக்கிய தனது பயணத்தைத் துவங்கும் என ஈரான் எண்ணெய் வளத்துறை அமைச்சர் Bijan Zanganeh.

இதற்கு முன் நடத்தக் கூட்டத்தில் ஈரான் நாட்டுக் கருத்து கடுமையான எதிர்ப்பைச் சவுதி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

 7,00,000 பேரல்கள் குறைப்பு

7,00,000 பேரல்கள் குறைப்பு

OPEC அமைப்பின் கூட்டத்தின் முடிவில் 33.24 மில்லியன் பேரலாக இருக்கும் கச்சா எண்ணெய் உற்பத்தி அளவுகள் 7,00,000 பேரல்கள் குறைக்கப்பட்டு 32.5 மில்லியன் பேரல் முதல் 33.0 மில்லியந் பேரலாக இருக்கும் என அறிவித்துள்ளது.

மேலும் எந்தெந்த நாடுகள் எவ்வளவு உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை அடுத்தக் கூட்டத்தில் OPEC அமைப்பு முடிவு செய்ய உள்ளது. அதேபோல் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க ரஷ்யா போன்ற கூட்டப்மைபில் இல்லாத நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதனால் சர்வதேச சந்தையில் அடுத்தச் சில நாட்களுக்குள் கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்பு அதிகளவில் உள்ளது.

 

48.67 டாலராக உயர்வு

48.67 டாலராக உயர்வு

கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு குறித்து OPEC அமைப்பின் அறிவிப்பு வெளியானதையொட்டி கச்சா எண்ணெய் சந்தையில் 44 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட பிரென்ட் கச்சா எண்ணெய் தற்போது 48.69 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த விலை நிலவரம் 2015ஆம் ஆண்டை ஒத்து இயங்கி வருகிறது.

 

8 வருடத்திற்கு பின்

8 வருடத்திற்கு பின்

கடந்த 8 வருடத்தில் முதல் முறையாக OPEC அமைப்பு தனது உற்பத்தி அளவுகளைக் குறைத்துள்ளது. இதனால் அமெரிக்கா போன்ற இவ்வமைப்பில் இல்லாத நாடுகளுக்கு எதிரான உற்பத்தி போர் முடிவடைந்துள்ளது.

இந்த முடிவிற்கு முக்கியக் காரணம் சவுதி அரேபியாவின் நிதிப் பற்றாக்குறை தான்.

 

சவுதி அரேபியா ஆதிக்கம்..

சவுதி அரேபியா ஆதிக்கம்..

சவுதி அரேபியா என்ற ஒரு நாடு அமெரிக்கா, ரஷ்யா என்னும் இரு வல்லரசு நாடுகளுக்கு இணையான அளவிற்கு ஒரு நாளுக்கு 10.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து கச்சா எண்ணெய் வர்த்தகச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

கச்சா எண்ணெய் விலை சரிவால் இந்நாட்டின் மொத்த வருமானம் கடந்த இரண்டு வருடங்களாகப் பாதியாகக் குறைந்துள்ளது.

 

Opec அமைப்பு

Opec அமைப்பு

இந்த அமைப்பில் அல்ஜீரியா, அங்கோலா, எக்குவடோர், காபோன், இந்தோனேஷியா, ஈரான், ஈராக், குவைத், லிபியா, நைஜீரியா, கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், வெனிசுலா ஆகிய 14 நாடுகள் உள்ளது. இதன் தலைமையகம் வியன்னாவில் உள்ளது.

சுவாரஸ்யங்கள்

சுவாரஸ்யங்கள்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+