அரபு நாடுகளின் முடிவால் இந்தியாவுக்கு மிகப்பெரிய நன்மை..!

அரபு நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் OPEC+ அமைப்பு ஞாயிற்றுக்கிழமை நடத்திய மிக முக்கியமான கூட்டத்தில் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் மத்தியில் இருந்த கச்சா எண்ணெய் உற்பத்தியிலிருந்த பிரச்சனையைத் தனி ஒப்பந்தம் மூலம் சரி செய்துகொண்டது.

இந்நிலையில் OPEC+ அமைப்பில் இருக்கும் அனைத்து நாடுகளும் சேர்ந்து ஆகஸ்ட் மாதம் முதல் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

கச்சா எண்ணெய் உற்பத்தி

கச்சா எண்ணெய் உற்பத்தி

சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் மத்தியில் உருவாக்கக் கச்சா எண்ணெய் உற்பத்தி பிரச்சனை நீண்ட காலம் தொடரும், இதனால் கச்சா எண்ணெய் சந்தை அதிகளவிலான பாதிப்பை எதிர்கொள்ளும் எனக் கணக்கிடப்பட்ட நிலையில், தற்போது சுமுகமாக முடிவடைந்துள்ளது.

OPEC+ அமைப்பு

OPEC+ அமைப்பு

ஞாயிற்றுக்கிழமை OPEC+ அமைப்பின் அமைச்சர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் உலக நாடுகள் கொரோனா தொற்றுப் பாதிப்பில் இருந்து மீண்டும் வரும் வேளையில் கச்சா எண்ணெய் விலை 2.5 வருட உச்சத்தை அடைந்துள்ளது. இந்த விலை உயர்வைத் தணிக்க ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து அதன் விலையைக் குறைக்க முடிவு செய்துள்ளது.

அரபு நாடுகள்

அரபு நாடுகள்

OPEC அமைப்பில் அரபு நாடுகள் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தினாலும் உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனமான ரஷ்யா-வும் இக்கூட்டத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. தற்போது நடந்துள்ள கூட்டத்தின் முடிவில் புதிய உற்பத்தி இலக்குகளை மே 2022 முதல் OPEC+ நாடுகள் பெற உள்ளது.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

கடந்த ஆண்டுக் கொரோனா தொற்றுக் காரணமாக உலகம் முழுவதும் லாக்டவுன் மூலம் முடங்கிய நிலையில் கச்சா எண்ணெய் தேவையும், விலையும் அதிகளவில் குறைந்தது. இதனால் OPEC+ அமைப்பில் இருக்கும் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை 1 கோடி பேரல் வரையில் குறைத்து அதன் விலையை உயர்த்தியது.

58 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்

58 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்

இதன் உற்பத்தி குறைப்பு மூலம் ஒரு நாளுக்கு 58 லட்சம் பேரல் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுச் சந்தைக்குக் கொண்டு வரப்பட்டது. இதேவேளையில் எரிபொருள் தேவையும் படிப்படியாக அதிகரித்த நிலையில் உற்பத்தி குறையாமல் இருந்த காரணத்தால் விலை மளமளவென உயரத் துவங்கியது.

OPEC+ அமைப்பின் கூட்டம்

OPEC+ அமைப்பின் கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை OPEC+ அமைப்பின் அமைச்சர்கள் எடுத்த முடிவில் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கப்படும் என்றும், இதன் மூலம் கச்சா எண்ணெய் விலை குறைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலை

பெட்ரோல் டீசல் விலை

கச்சா எண்ணெய் விலை குறையும் பட்சத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைய உள்ளது. காரணம் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக வைத்துத் தான் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கிறது.

விலை குறையும்

விலை குறையும்

100 சதவீதம் மக்களுக்குச் சாதகமாக நடந்துகொள்ளும் இந்திய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், கச்சா எண்ணெய் விலையைக் குறையக் குறைய ரீடைல் சந்தையில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலையைத் தொடர்ந்து குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள்

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள்

சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் மத்தியில் உருவான பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் மே 2022 முதல் ஐக்கிய அரபு நாடுகள் தினமும் 3.5 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்-ம், சவுதி மற்றும் ரஷ்யா இணைந்து 11.5 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய முடிவு எடுக்கப்பட்டு இதற்காகத் தனி ஒப்பந்தத்தையும் செய்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+