கடந்த 2 வருடத்தில் கச்சா எண்ணெய் விலை சுமார் 60 சதவீதம் வரை குறைந்த நிலையில் 2 வருடமாகக் குறைக்காத உற்பத்தியை இப்போது குறைக்க என்ன காரணமாக இருக்கும்.?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகளின் அதிக அளவிலான உற்பத்தி மற்றும் தேவைக்கு அதிகமான இருப்புக் காரணமாகக் கடந்த 2 வருடத்தில் கச்சா எண்ணெய் விலை சுமார் 60 சதவீதம் வரை குறைந்தது.
இந்நிலையில் 2 வருடமாகக் குறைக்காத உற்பத்தியை இப்போது குறைக்க என்ன காரணமாக இருக்கும்.?
மறுப்பும்.. அதன் பின்னால் இருக்கும் காரணமும்..!
2014ஆம் ஆண்டு OPEC அமைப்பின் முக்கியப் பங்குதாரரான சவுதி அரேபிய நாடு தங்களது அதீத உற்பத்தியைக் குறைக்க மறுப்புத் தெரிவித்தது.
கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பால் இதன் விலை அதிகளவில் குறைந்ததன் மூலம் சந்தையில் புதிதாய் களமிறங்கியுள்ள அமெரிக்கக் கச்சா எண்ணெய் மற்றும் மீத்தேன் வாயு உற்பத்தித் துறை அதிக உற்பத்தி செலவுகள் மூலம் முழுமையாக முடங்கிப் போய்விடும் என்பது சவுதி அரேபியாவின் கணக்கு.
அமெரிக்க பாதிப்பு
அதேபோல் அமெரிக்காவில் மேற்கு டகோட்டா மற்றும் டெக்ஸாஸ் பகுதியில் சில வர்த்தகம் முடங்கிப்போனது. சவதி அரேபியாவின் இந்தக் கடினமான முடிவு தங்களது வர்த்தகத்தைப் பாதிக்க அவர்களுக்கு ஒத்துழைத்தது. மேலும் இதன் மூலம் கச்சா எண்ணெய் விலை 1980ஆம் ஆண்டு நிலைக்குச் சென்றடைந்தது.
ஆனால் இந்த 2 வருட காலத்தில் உலகளவில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதில் சிலவற்றை இப்போது பார்ப்போம்.
உற்பத்தி குறைப்பு
அமெரிக்கச் சந்தை விலையைக் கட்டுக்குள் கொண்டுவரக் கச்சா எண்ணெய் உற்பத்தி 9.6 மில்லியன் பேரலில் இருந்து 8.6 மில்லியன் பேரலாகக் குறைத்தது.
முதலீடு மாயம்
1 டிரில்லியன் டாலர் அளவிலான எண்ணெய் முதலீடுகள் உலகளவில் காணாமல்போனது
வர்த்தக தடை
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டுப் பல வருடங்களுக்குப் பின் ஈரான் கச்சா எண்ணெய் சந்தைக்கு வந்துள்ளது.
வங்கிகள் பரிதவிப்பு
கச்சா எண்ணெய் வர்த்தகம் மூலம் அதிகளவிலான வருவாய் பாதிப்புகளைச் சவுதி அரசு சந்தித்தது. இதனால் வங்கிகள் அந்நாட்டு மக்களுக்குக் கடன் அளிக்கக் கூட முடியாத நிலை ஏற்பட்டது.
நிதிப்பற்றாக்குறை
சவுதி நாட்டின் சமுகப் பணிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த நிதிகளைக் கூடக் குறைக்கும் நிலைக்கு இந்நாட்டின் அரசு தள்ளப்பட்டது.
இறுதி முடிவு
தற்போது இந்த விலை குறைப்பின் மூலம் அமெரிக்காவின் எண்ணெய் வர்த்தகமும் பாதித்த நிலையில், தனது நிதிநிலையை மேம்படுத்த OPEC அமைப்பு தனது உற்பத்தி அளவுகளைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications