இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகள் அனைத்தும் (OPEC+ நாடுகளைத் தவிர்த்து) தனது கச்சா எண்ணெய் தேவையைப் பெருமளவு இறக்குமதி வாயிலாகவே தீர்த்து வருகிறது.
இந்நிலையில் உலக நாடுகளில் கச்சா எண்ணெய்க்கு ஏற்பட்டு உள்ள அதிகப்படியான தேவையும், அதன் உற்பத்தியில் ஏற்பட்டு உள்ள சரிவின் காரணமாகவும் கச்சா எண்ணெய் விலை தற்போது மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
அமெரிக்கா கோரிக்கை
அமெரிக்கா உட்பட பல முன்னணி நாடுகள் கச்சா எண்ணெய் அதிகளவில் உற்பத்தி செய்யும் OPEC நாடுகள் மற்றும் அதன் கூட்டணி நாடுகளை அதன் உற்பத்தி அளவை அதிகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தது.
OPEC+ அமைப்பு
இதற்காக OPEC+ அமைப்பு நேற்று முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசனை செய்தது. ஏற்கனவே வளைகுடா நாடுகள் மத்தியில் அதிகளவிலான வர்த்தகப் போட்டிகள் இருக்கும் வேளையில் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்தால் இதன் விலை குறைந்துவிடும்.
மறுப்பு
இதனால் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் OPEC+ அமைப்பில் இருக்கும் அனைத்து நாடுகளும் ஒருமனதாகத் தற்போது இருக்கும் உற்பத்தி அளவீட்டைத் தொடர்வதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் கோரிக்கைக்குப் பலன் அளிக்கும் என எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் ஏமாற்றம் மட்டுமே கிடைத்துள்ளது.
ஆகஸ்ட் உற்பத்தி அளவீடுகள்
இதன் படி ஆகஸ்ட் மாதம் OPEC+ அமைப்பு முடிவு செய்தபடி ஒரு மாதத்திற்கு 4,00,000 பேரல் கச்சா எண்ணெய் கூடுதலாக உற்பத்தி செய்ய முடிவு எடுக்கப்பட்டது. இதை நவம்பர் மாதம் மட்டும் அல்லாமல் டிசம்பர் மாதமும் அமலாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை
இதனால் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஏற்பட்டு உள்ள மந்த நிலை காரணமாகக் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் விலை மாற்றம் பெட்ரோல், டீசல் விலையிலும் ஏற்படும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.
பொருளாதாரம் - பணவீக்கம்
கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருக்கும் காரணத்தால் பொருளாதார வளர்ச்சி அளவீடுகள் பாதிப்பது மட்டும் அல்லாமல் உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கும். இதனால் உலகில் அனைத்து நாடுகளிலும் பணவீக்கம் அதிகரிக்கும், கொரோனா தொற்று பாதிப்புக்குப் பின்பு அனைத்து நாடுகளுக்கும் இருக்கும் மிக முக்கியமான பிரச்சனை பணவீக்கம்.
அமெரிக்கா தோல்வி
அமெரிக்காவில் பணவீக்கம் பிரச்சனை பெரியதாக வெடித்துள்ள காரணத்தால் நாணய கொள்கை தளர்வுகளைக் குறைக்க முடிவு செய்தது. இதைச் செய்யும் முன்பு அமெரிக்க அரசு தனது பணவீக்க பிரச்சனையைக் கச்சா எண்ணெய் விலை மூலம் தீர்க்கலாம் என்ற திட்டத்தில் OPEC+ அமைப்பிற்குக் கோரிக்கை வைத்தது.
தற்போது OPEC+ அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் உலக நாடுகளின் பணவீக்கத்தை நாணய கொள்கை மூலம் ஈடு செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications