ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சாம் ஆல்ட் மேனுக்கும் , எக்ஸ் தள தலைவர் எலான் மஸ்கிற்கு இடையே கடுமையான மோதல் நிலவி வந்த நிலையில் திடீரென சாமி ஆல்ட்மேன் எலான் மஸ்கிடம் நாம் நண்பர்களாக இருப்போம் எனக் கூறியிருப்பது பெரிய விவாத பொருளாக மாறி உள்ளது.
சாட் ஜிபிடி உரிமையாளரான ஓபன் ஏஐ நிறுவனத்தில் முதலில் எலான் மஸ்க் முதலீடு செய்து இருந்தார். பின்னர் ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேனுக்கும் எலான் மஸ்கிற்கும் இடையே பல்வேறு மோதல்கள் ஏற்பட்டதை அடுத்து எலான் மஸ்க் ஓபன் ஏஐ நிறுவனத்திலிருந்து வெளியேறினார். அதன் பின்னர் தான் ஓபன் ஏஐ சாட் ஜிபிடியை வெளியிட்டு பெரிய அளவில் வெற்றி அடைந்தது.

பொதுவாகவே எலான் மஸ்க் , சாட் ஜிபிடியை குறைகூறி எக்ஸ் தளத்தில் பதிவிடுவார், அதற்கு சாம் ஆல்ட்மேன் பதில் அளிப்பார். இதன் மூலம் இருவரின் கருத்து வேறுபாடுகளும் வெளிப்படையாகவே இருந்து வந்தது. இந்த சூழலில் தான் சாம் ஆல்ட்மேன் , எலான் மஸ்கை டேக் செய்து நாம் நண்பர்களாக இருப்போம் என பதிவு செய்திருக்கிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு சாம் ஆல்ட்மேனுக்கும் கணினி ஆய்வாளர் பால் கிரகாமுக்கும் இடையே எக்ஸ் தளத்தில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. அப்போது பால் கிரகாம், டொனால்ட் டிரம்ப்பை வீழ்த்துவதற்காக சாம் ஆல்ட்மேன் நிறைய செய்திருக்கிறார் என பதிவு செய்திருந்தார். அதற்கு சாம் ஆல்ட்மேன் நன்றி பால் என பதில் அளித்து இருக்கார்.
இந்த கலந்துரையாடலை மறுபடியும் பதிவு செய்திருக்கும் எலான் மஸ்க் ஒரு எமோஜியை பதிவு செய்திருந்தார். அதற்கு பதில் அளித்திருக்கும் சாம் ஆல்ட்மேன் அந்த காலகட்டத்தில் நாம் இருவரும் நினைத்ததுமே தவறாகிவிட்டது. குறிப்பாக நான் நினைத்தது தவறாகிப் போய்விட்டது என குறிப்பிட்டு இருக்கிறார். 2016 ஆம் ஆண்டிலிருந்து 2022 வரை என அவரது குறிப்பிட்டிருக்கிறார். டிரம்புக்கு எதிரான நிலைபாட்டுடன் தானும், எலான் மஸ்க்கும் இருந்ததை சாம் ஆல்ட்மேன் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எது எப்படி இருந்தாலும் அடுத்த வாரம் சந்திப்போம் நண்பர்களாக இருப்போம் என சாம் ஆல்ட்மேன் , எலான் மஸ்கிற்கு அழைப்பு விடுத்துள்ளார். செயற்கை பொது நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் நம்முடைய இந்த மோதலை நாம் கொண்டு வரக்கூடாது என பதிவு செய்திருக்கிறார். முன்னதாக ஓபன் ஏஐ நிறுவனத்தின் மீதும், சாம் ஆல்ட்மேன் மீது போட்டிருந்த வழக்கை எலான் மஸ்க் திரும்ப பெற்று இருக்கிறார்.
More From GoodReturns

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!



Click it and Unblock the Notifications