செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் எந்த ஜில்லாவிலும் இல்லாத கூட்டாளிகளாக இருந்த ஓபன்ஏஐ (OpenAI) மற்றும் மைக்ரோசாப்ட் இடையே பிளவும் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள பரபர தகவல் படி ஓபன்ஏஐ நிர்வாகத்தில் மைக்ரோசாப்ட்டின் ஆதிக்கம் அதிகமாக இருப்பது சாம் ஆல்ட்மேன்-க்கு பிடிக்கவில்லையாம். இதனால் மைக்ரோசாப்ட்-க்கு எதிராக பல வேலைகளை செய்துக்கொண்டு வருகிறதாம்.
இதனால் வேகமாக வளர்ச்சி அடைந்தும் ஏஐ துறையில் பிரேக் அடித்தது போல் நிலை மாறியுள்ளது. இதனால் இரு நிறுவனங்களுக்கும் மத்தியிலான ஒப்பந்தத்தை திருத்த சாம் ஆல்ட்மேன் தலைமையிலான ஓப்பன்ஏஐ நிர்வாகம் அரசின் உதவியை நாடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது சத்ய நாடெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட்-க்கு பெரும் தலைவலியாக மாறுவது மட்டும் அல்லாமல் ஏஐ துறையில் புதிய போட்டி மற்றும் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதிலும் முக்கியமாக இந்த கூட்டணி விரிசலில் கூகுள் பெரும் பகுதி வர்த்தகத்தை கைப்பற்றுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஓபன்ஏஐ நிறுவனத்தில் பெரும் சண்டை நடந்துக்கொண்டு இருக்கும் போது, அதன் நிறுவனர் சாம் ஆல்ட்மேன் நிறுவனத்தை விட்டே வெளியேற்றப்பட்ட நிலையில் மைக்ரோசாப்ட் உடனான கூட்டணியும், முதலீடும் தான் மீண்டும் தற்போதைய இடத்தை சாம் ஆல்ட்மேன்-க்கு பெற்று தந்தது.
2019-ல் மைக்ரோசாப்ட் 1 பில்லியன் டாலர் முதலீட்டுடன் ஓபன்ஏஐ-யுடன் கூட்டணி அமைத்தது, 2023-ல் ஓப்பன்ஏஐ நிர்வாகத்தில் பிரச்சனை எழுந்த போது $10 பில்லியனை கூடுதலாக முதலீடு செய்தது. இந்த ஒப்பந்தம், ஓபன்ஏஐ-யை மைக்ரோசாப்ட்டின் அஸூர் (Azure) கிளவுட் சேவைகளைப் பயன்படுத்த கட்டாயப்படுத்தியது, இதேபோல் அதன் பிங் சர்ச் சேவையை சாட்ஜிபிடி-யின் அடித்தளமாக பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.
இதனால் மைக்ரோசாப்ட்டின் கட்டுப்பாடு அதிகரித்ததாக உணர்ந்த ஓபன்ஏஐ, அதன் தொழில்நுட்ப மற்றும் வணிக முடிவுகளில் சுதந்திரம் வேண்டும் என முடிவு செய்து தற்போது கூட்டணியை உடைக்க முடிவு செய்துள்ளது.
ஓபன்ஏஐ-யின் முக்கிய நிர்வாகிகள், மைக்ரோசாப்ட்டின் ஆதிக்கத்தை சந்தையில் போட்டி போடுவதற்கு எதிராக உள்ளது என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசு தலையீட்டை கோருவது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
ஓபன்ஏஐ - மைக்ரோசாப்ட் கூட்டணி உடைந்தால் என்ன நடக்கும்?:
கிளவுட் சேவை பன்முகப்படுத்தல்: ஓபன்ஏஐ, அஸூர் சேவைகளுக்கு மாற்றாக அமேசான் (AWS) மற்றும் கூகுள் கிளவுட் உடன் பேச்சுவார்த்தை நடத்தி, இதன் மூலம் மைக்ரோசாப்ட்டைச் சார்ந்திருக்கும் நிலையை குறைக்க முயல்கிறது. இதேபோல் செலவுகளையும் குறைக்க முடியும்.
லாப நோக்கு மாற்றம்: ஓபன்ஏஐ நிறுவனத்தை லாப நோக்கு நிறுவனமாக மாறுவதற்கு மைக்ரோசாப்ட்டின் ஒப்புதல் தேவைப்படுகிறது. இக்கூட்டணியை உடைத்தால் நிர்வாக முடிவில் கூடுதல் சுதந்திரம் கிடைக்கும்.
விண்ட்சர்ப் முதல் எதிர்ப்பு:
சமீபத்தில் ஓபன்ஏஐ சுமார் 3 பில்லியன் டாலர் தொகைக்கு விண்ட்சர்ப் (Windsurf) என்னும் ஏஐ கோடிங் தளத்தை கையகப்படுத்தியது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த நிறுவனத்தை முதலில் மைக்ரோசாப்ட் வாங்க திட்டமிட்டது. தனது எதிர்ப்பை காட்ட நடுவில் புகுந்து மொத்தமாக கைப்பற்றியது.
விண்ட்சர்ப் என்பது ஒரு ஏஐ கோடிங் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற ஸ்டார்ட்அப் ஆகும், இதன் தொழில்நுட்பம் மைக்ரோசாப்ட்டின் கிட்ஹப் கோபைலட் (GitHub Copilot) தளத்தை பெரிய அளவில் மேம்படுத்தும் திறன் கொண்டாத இருந்தது. ஆனால், ஓபன்ஏஐ, இந்த தொழில்நுட்பத்தை மைக்ரோசாப்ட்டுடன் பகிர கூடாது என்பதற்காகவே நடுவில் புகுந்து பெரும் தொகைக்கு கைப்பற்றியது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications