அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் ஸ்டார்கேட் என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்த திட்டம் மூலம் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து அதற்கான தடுப்பு மருந்தினை உருவாக்க முடியும்.
ஒராக்கிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான லேரி எலிசன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் முன்கூட்டியே புற்றுநோய் பாதிப்பை கண்டறிய முடியும் என்றும் ஒவ்வொரு தனி நபருக்கும் தேவையான புற்றுநோய் தடுப்பு மருந்தை 48 மணி நேரங்களுக்குள் உருவாக்கி தர முடியும் என்றும் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் ஸ்டார் கேட் திட்ட தொடக்க நிகழ்ச்சியில் பேசிய ஒராக்கிள் நிறுவனத்தின் தலைவர் லேரி எலிசன் இந்த தகவலை வெளியிட்டார்.

இந்த நிகழ்வில் சாப்ட் பேங்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மஷாயோஷி சன் மற்றும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வழக்கமாக புற்றுநோய் கட்டிகளின் சிறு துண்டுகள் நம்முடைய ரத்தத்தில் மிதந்து கொண்டிருக்கும். அதைக் கொண்டே நம்முடைய உடம்பில் புற்றுநோய் உண்டாவதை முன்கூட்டியே கண்டறிந்து விடலாம் என தெரிவித்துள்ள லேரி எலிசன், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் இதனை நாம் முன்கூட்டியே கண்டறிந்து விட முடியும் என கூறியுள்ளார்.
அந்த புற்றுநோய் கட்டியை ஜீன் சிக்குவென்ஸ் செய்வதன் மூலம் அது வளர்வதற்கு எதிரான தடுப்பு மருந்தினை நாம் எளிதாக உருவாக்க முடியும் என கூறியுள்ளார். இதன் மூலம் முன்கூட்டியே புற்றுநோய் கண்டறியப்பட்ட நபர்களுக்கு மேற்கொண்டு அது வளராமல் தடுக்கும் வகையில் தடுப்பு மருந்து உருவாக்கித் தர முடியும் என கூறியுள்ளார். இந்த எம்ஆர்என்ஏ வகை தடுப்பு மருந்தானது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியோடு 48 மணி நேரங்களுக்குள் உருவாக்கி விட முடியும் என லேரி எலிசன் நம்பிக்கை அளித்துள்ளார்.
முன்கூட்டியே புற்றுநோயை கண்டறிவது அது எந்த வகையான புற்றுநோய் அதனை எப்படி தடுப்பது ஒவ்வொரு தனி நபருக்கும் அவரின் உடல் நிலைக்கு ஏற்ற தடுப்பு மருந்துகளை உண்டாக்குவது என இவை அனைத்தையும் 48 மணி நேரங்களுக்குள் செய்து காட்டிட முடியும். எதிர்காலத்தில் செயற்கை தொழில்நுட்பம் இதைதான் நமக்கு செய்து தரப் போகிறது என லேரி எலிசன் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபராக பதவி ஏற்றிருக்கும் டொனால்ட் டிரம்ப் 500 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு திட்டமான ஸ்டார் கேட்டை வெள்ளை மாளிகையில் தொடங்கி வைத்தார். அப்போது இந்த துறை சார்ந்து இயங்கக்கூடிய நிறுவனங்களின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்தத் திட்டத்திற்காக அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் மிகப்பெரிய டேட்டா மையம் நிறுவப்பட இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஓபன் ஏஐ தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் இப்படி ஒரு திட்டத்திற்கு அனுமதி தந்த டொனால்ட் ட்ரம்புக்கு நன்றி என கூறினார். புற்றுநோய் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை நாம் முன்கூட்டியே கண்டறிந்து சரியான சிகிச்சை அளிக்க இந்த திட்டம் உதவியாக இருக்கும் என்றார்.
Story written by: Devika
More From GoodReturns

தொடர்கிறது ஈரான் போர்!! நாளை காலை 10 மணிக்கு தரமான சம்பவம் காத்திருக்கிறது என அறிவித்த டிரம்ப்!!

அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்: போர் நிறுத்தம் நீடிக்குமா? மீண்டும் பேச்சுவார்த்தை நடக்குமா?

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications