வாஷிங்டன்: மைரோசாப்ட், அமேசான் மற்றும் போயிங் உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ள சியாட்டில் இருந்து வேலை பார்க்கும் வெளிநாட்டவர்களில் 40 சதவீதத்தினர் இந்தியர்களே என்று அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
சிலிககான் வேலி 70 சதவீதம் வரை வெளிநாட்டு ஐடி ஊழியர்களை மட்டுமே நம்பி இருக்கிறது. சாபிரான்சிஸ்கோவில் பாதிப்பும் மேற்பட்ட டெக் ஊழியர்கள் வெளிநாட்டவர்கள் ஆவர்.

சீயாட்டலில் உள்ள உள்ள டெக் ஊழியர்களில் 40 சதவீததினர் வெளிநாட்டவர்கள், அதிலும் 40 சதவீதத்தினர் இந்தியர்கள் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனா 13.5 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவின் பிற ஐடி ஹப்புகளிலும் வெளிநாட்டவர்களே அதிகம் உள்ளனர். வாஷிங்டன்-ஆர்லிங்டன்-அலெக்ஸாண்டிரியா (33.8%), டல்லாஸ்-ஃபோர்ட் வொர்த் (31.4%), போஸ்டன்-கேம்பிரிட்ஜ் (30.8%), மற்றும் சான் டியாகோ-கார்ல்ஸ்பேட் (30.5%).


Click it and Unblock the Notifications