பெய்ஜிங்: உலகளவில் மிகப்பெரிய ஈகாமர்ஸ் சந்தையாக விளங்கும் சீனா பற்றி ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. இச்செய்தியின் மூலம் சீன சந்தை மட்டும் அல்லாமல் உலகளவில் வர்த்தகம் செய்து வரும் அலிபாபா போன்ற முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்களின் வர்த்தகம் அதிகளவில் பாதிக்க உள்ளது.
வாடிக்கையாளர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், சீன ஈகாமர்ஸ் சந்தையில் இருக்கும் 58.7 சதவீத பொருட்கள் மட்டுமே தரமானதாகவும், உண்மையான பொருளாகவும் உள்ளது. மீதமுள்ள 40 சதவீத பொருட்கள் போலியானதாகவும், தரம் குறைந்ததாகவும் உள்ளது என இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
புகார்கள்
கடந்த நிதியாண்டில் மட்டும் ஈகாமர்ஸ் சந்தையில் விற்கப்படும் போலியான பொருட்கள் குறித்து வாடிக்கையாளர்கள் சுமார் 77,800 புகார்கள் அளித்துள்ளனர். இது 2014ஆம் ஆண்டை விடவும் 356.6 சதவீதம் அதிகமான புகார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் புகார்களின் பெயரில் செய்யப்பட்ட ஆய்வில் சீன நாட்டின் வாடிக்கையாளர் உரிமை மற்றும் விருப்ப பாதுகாப்பு சட்டத்தின் கீழ், இந்நாட்டு வணிகத்துறை அறிக்கையைச் சமர்ப்பிக்கப்பட்டது.
கட்டுப்பாடுகள்
இந்த அறிக்கையை ஏற்றச் சீன அரசின் உயர் தலைவர் Zhang Dejiang ஆன்லைன் வர்த்தகத்தில் தொடர் கண்காணிப்பில் வைக்கவும், வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதிக்கவும் அறிவித்துள்ளதாக இந்நாட்டு அரசு பத்திரிக்கை நிறுவனமான ஜின்ஹூவா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவும்.. சீனாவும்..
ஆன்லைன் வர்த்தகத்தில் அமெரிக்காவை விடவும் 142பில்லியன் டாலர் அதிக மதிப்புடையது சீனா வர்த்தகம். 2014ஆம் நிதியாண்டின் படி சீனாவின் மொத்த ஆன்லைன் சந்தை மதிப்பு 442 பில்லியன் டாலர், அமெரிக்கா 300 பில்லியன் டாலர் மட்டுமே மதிப்பிடப்பட்டுள்ளது.
இண்டர்நெட்
கடந்த 5 வருடத்தில் சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் இண்டர்நெட் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதன் மூலம் சீனாவின் மொத்த ஜிடிபி வளர்ச்சியில் 7 சதவீதத்தைத் தன்நக்கத்தில் வைத்துள்ளது.
இந்தியாவில் என்ன நிலை...!
தற்போதைய நிலையில் இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் போலியான பொருட்கள் குறித்த புகார்கள் மற்றும் இதுகுறித்த பிரச்சனைகள் மிகவும் குறைவு என்பதால் இதுகுறித்த கவலை தேவையில்லை.
ஆனால் அலிபாபா நிறுவனம் பேடிஎம் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் தனது வர்த்தகத்தைத் துவங்கியுள்ளதால். கவனமாக ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுப்பட வேண்டும்.
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications