அமெரிக்காவில் திவாலாகும் அடுத்த வங்கி இதுதான்.. பதற்றத்தில் பைடன் அரசு.. இனியும் மறைக்க முடியாது!!

உலகின் வல்லரசு நாடுகளாக இருக்கும் அமெரிக்கா, சீனா ஆகியவை மிகப்பெரிய பிரச்சனையில் மாட்டிக்கொண்டு உள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் பல பிராந்திய வங்கிகள் பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகித உயர்வை தொடர்ந்து பெரும் நெக்கடியில் மாட்டிக்கொண்டு உள்ளது.

இதனால் அடுத்தடுத்து வங்கிகள் திவாலாகி வரும் வேளையிலும், கடன் வரம்பை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு அமெரிக்க அரசு தள்ளப்பட்டு உள்ளதால் இனியும் வல்லரசு நாட்டில் எவ்விதமான பிரச்சனையும் இல்லை என்பதை மறைக்க முடியாது. இந்த நிலையில் அமெரிக்காவில் மற்றொரு வங்கி திவாலாக தயாராகியுள்ளது.

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் PACIFIC WESTERN BANK-ன் ஹோல்டிங் நிறுவனமான பேக்வெஸ்ட் பான்கார்ப் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதால் விற்பனை செய்யவோ அல்லது மூலதனத்தை திரட்டு காப்பாற்றும் இறுதிக்கட்ட வாய்ப்புகளை தேடி வருகிறது.

PACIFIC WESTERN BANK-ன் வீழ்ச்சி சந்தையில் பெரும் தாக்கத்தை அமெரிக்க சந்தையில் ஏற்படுத்தி வரும் வேளையில் பிற பிராந்திய வங்கிகளிலும் இதன் தாக்கம் எதிரொலித்துள்ளது. குறிப்பாக Western Alliance Bancorp பங்குகளை கடுமையாக பாதித்துள்ளது, சில்வர்கேட் மற்றும் சிலிக்கான் வேலி பேங்க்-ல் துவங்கிய பிரச்சனை தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

PACIFIC WESTERN BANK நிர்வாகம் அந்நாட்டின் வங்கி கட்டுப்பாட்டு அமைப்பு வங்கி மற்றும் நிதி ஆதாரங்களை கைப்பற்றுவதற்கு முன்பு புதிய நிதியை திரட்டியோ அல்லது வங்கிகளை வாங்குபவரிடம் ஒப்பந்தம் செய்தோ இவ்வங்கியை காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. மார்ச் மாதம் தான் PACIFIC WESTERN BANK சுமார் 1.4 பில்லியன் டாலர் நிதியை அட்லாஸ் எஸ்பி பார்ட்னர்ஸ்-யிடம் இருந்து பெற்றது.

அமெரிக்காவில் திவாலாகும் அடுத்த வங்கி இதுதான்.. பதற்றத்தில் பைடன் அரசு.. இனியும் மறைக்க முடியாது!!

PACIFIC WESTERN வங்கி பங்குகள் சுமார் 52 சதவீதம் வரையில் சரிந்த நிலையில், இதனால் பாதிக்கப்பட்ட Western Alliance Bancorp பங்குகள் 23 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இதோடு அமெரிக்காவின் பிற பிராந்திய வங்கிகளான Zion Bancorp, Comerica, First Horizon ஆகியவை 7 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் மார்ச் 8ஆம் தேதியில் இருந்து PACIFIC WESTERN வங்கி பங்குகள் 90 சதவீதம் வரையில் சரிந்தது, இதுதான் சந்தை கண்காணிப்பாளர்கள் மத்தியில் அமெரிக்காவில் அடுத்து திவாலாகப்போகும் வங்கி என்று அறிவிக்க முக்கிய காரணமாக உள்ளது.

சமீபத்தில் அமெரிக்காவில் 30 பில்லியன் டாலர் கொடுத்து காப்பாற்றப்பட்ட First Republic Bank ஒரு சில வாரத்திலேயே திவாலானது. இது மட்டும் அல்லாமல் இந்த பிரச்சனை பெரியதாக வெடிக்கும் முன்பு அமெரிக்க அரசு மற்றும் FDIC தலையீடு காரணமாக ஏலம் முறையில் JPMorgan Chase திவாலான பர்ஸ்ட் ரிப்பப்ளிக் பேங்க் கைப்பற்றப்பட்டது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+