பணவீக்கம் தொடர் உயர்வு.. பாகிஸ்தான் எடுக்கு திடீர் முடிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாகிஸ்தானின் மத்திய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை அதன் நாணய கொள்கை கூட்டத்தில் அந்நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த தனது பென்ச்மார்க் வட்டி விகித்தை உயரத்தியுள்ளது.

 

சற்றும் எதிர்பார்க்காத வகையில் இன்று பென்சமார்க் வட்டி விகிதத்தை சுமார் 100 அடிப்படை புள்ளிகள் அதாவது 1 சதவீதம் அதிகரித்து 16 சதவீதமாக உயர்த்தியுள்ளது என்று மத்திய வங்கியின் நாணயக் கொள்கைக் குழுவின் கூட்டம் முடிந்த பின்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான், இலங்கையை அடுத்து சிக்கலில் 3 நாடுகள் .. லிஸ்டில் யாரெல்லாம்? பாகிஸ்தான், இலங்கையை அடுத்து சிக்கலில் 3 நாடுகள் .. லிஸ்டில் யாரெல்லாம்?

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

பாகிஸ்தான் நாட்டில் பணவீக்க அழுத்தங்கள் எதிர்பார்த்ததை விட வலுவாகவும், மோசமாகவும் இருக்கும் காரணத்தாலும், முன்பு கணிக்கப்பட்ட அளவை காட்டிலும் பணவீக்கம் அதிகரித்த காரணத்தால் பாகிஸ்தானின் மத்திய வங்கி வெள்ளிக்கிழமை அதன் நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது.

16 சதவீத வட்டி

16 சதவீத வட்டி

அக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வங்கி அதன் கடைசி இரண்டு கூட்டங்களில் விகிதத்தை மாற்றாமல் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது பாகிஸ்தானில் பென்ச்மார்க் வட்டி விகிதம் 16 சதவீதமாக உள்ளது, இதற்கு முன்பு 1998ல் பென்ச்மார்க் வட்டி விகிதம் 16.5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐஎம்எப் பிரிந்துரை
 

ஐஎம்எப் பிரிந்துரை

மேலும் ஐஎம்எப் பிரிந்துரைப்படி அடுத்த வட்டி விகித உயர்வுக்கான கால இடைவெளி அதிகமாக இருக்கும் நிலையில், இந்த இடைப்பட்ட காலத்தில் வேகமாக அதிகரித்து வரும் பணவீக்கத்தை குறைக்க வேண்டும் என்பதற்காக வட்டி விகிதத்தை அதிகரித்து உள்ளது பாகிஸ்தானின் மத்திய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் பாகிஸ்தான் .

மத்திய வங்கி

மத்திய வங்கி

மத்திய வங்கி பணவீக்கத்தில் அதிக கவனம் செலுத்துகிறது. இந்த வட்டி விகித உயர்வு மூலம் பணவீக்கம் மட்டுமல்ல நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார சூழ்நிலையையும் பாதிக்கும். பொருளாதார தேவை, கடன் தேவை மற்றும் GDP வளர்ச்சி குறைந்துள்ளது என்று ஸ்டேட் பாங்க் ஆப் பாகிஸ்தான்கூறுகிறது.

 ஸ்டேட் பாங்க் ஆப் பாகிஸ்தான்

ஸ்டேட் பாங்க் ஆப் பாகிஸ்தான்

வட்டி விகித உயர்வால் ஸ்டேட் பாங்க் ஆப் பாகிஸ்தான் என்ன சாதிக்கும்? என்றால் நிதிச் செலவு அதிகரிக்கும் என்றும், கார்ப்பரேட் துறையின் லாபத்தை அடிமட்டத்திற்கு கொண்டு செல்லும் இது பொருளாதார மந்தநிலையை மேலும் மோசமாக்கும் என இஸ்மாயில் இக்பால் செக்யூரிட்டீஸ் லிமிடெட் ஆராய்ச்சித் தலைவர் ஃபஹத் ரவூப் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Pakistan central bank hikes interest rate to 16 Percent; highest since 1998-99

Pakistan central bank hikes interest rate to 16 Percent; highest since 1998-99
Story first published: Friday, November 25, 2022, 22:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X