பாகிஸ்தானில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், பாகிஸ்தான் மத்திய வங்கியானது மீண்டும் 100 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, அதன் வட்டி விகிதத்தினை 21% ஆக அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானின் இந்த முடிவானது கடந்த மார்ச் மாதத்தில் நுகர்வோர் விலை குறியீடானது, 35.37% ஆக அதிகரித்துள்ள நிலையில் வந்துள்ளது.
ஏற்கனவே வரலாறு காணாத பணவீக்கம், பெரு வெள்ளம், உணவு பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை, வரலாறு காணாத அளவு வட்டி விகிதம் என பல காரணிகளுக்கு மத்தியில் சிக்கி சீரழிந்து வருகின்றது.
வரலாறு காணாத அளவுக்கு ஏற்றம்
இந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது இன்னும் எந்த மாதிரியான பிரச்சனைகளை எல்லாம் கொண்டு வரப்போகிறதோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக அடுத்த இலங்கையாக பாகிஸ்தான் மாறலாம் என்ற கூறப்பட்ட நிலையில், போகிற போக்கினை பார்த்தால் இலங்கையை விட பாகிஸ்தானின் நிலை மோசமாகி விடும்போல. அந்தளவுக்கு வட்டி விகிதம் என்பது வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
விலைவாசி உச்சம்
ஏற்கனவே அன்னிய செலாவணி குறைந்து வரும் நிலையில், இறக்குமதியும் குறைந்து. உச்சத்தில் உள்ள பணவீக்கத்தின் மத்தியில், அத்தியாவசிய பொருட்கள் உள்பட பல்வற்றின் விலையும் உச்சத்தில் இருந்து வருகின்றது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் 31.60% ஆக இருந்த பணவீக்கமானது, ஜனவரி மாதத்தில் 27.60 சதவீதமாகவும் இருந்தது. கடந்த 1965ம் ஆண்டில் இருந்து பாகிஸ்தானின் நுகர்வோர் விலை குறையீடானது பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது.
முக்கிய பணவீக்கங்கள்
இப்படி ஓரு நெருக்கடியான சூழலில் தான் பாகிஸ்தானின் மத்திய வ்ங்கியானது வட்டி விகிதத்தினை இந்தளவுக்கு கடுமையாக உயர்த்தியுள்ளது.
உணவுப் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 34.6% ஆகவும், வீட்டு வாடகை பணவீக்கம் 23.60% ஆகவும், உடைகள் மற்றும் காலணிகளின் பணவீக்கம் 8.60% ஆகவும் இருந்துள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் உணவுப் பணவீக்கம் 47% உயர்ந்துள்ளது. வீட்டு வாடகை பணவீக்கம் 17.50%-மும், துணிகள் மற்றும் காலணிகளின் பணவீக்கம் 21.90-மும், போக்குவரத்துக்கான பணவீக்கம் 54.94% -மும் உயர்ந்துள்ளது.
பொருளாதார நெருக்கடி
சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தானில் கடுமையான கோதுமை பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், இதனை இலவசமாக பெறும் போது அதனை வாங்க அலைமோதி கூட்டத்தில், 10-க்கும் மேற்பட்டோர் சிக்கி உயிரிழந்துள்ளது குறிப்பிட்டது. பொருளாதார நெருக்கடியாக இருந்து வரும் இப்பிரச்சனை, தற்போது உணவு நெருக்கடியாகவும் மாறி வருகின்றது.
பிரச்சனை அதிகரிக்கலாம்
இப்படி ஏற்கனவே என்ன செய்வது என தெரியாது என இருக்கும் மக்களுக்கு, பாகிஸ்தான் மத்திய வங்கியின் வட்டி அதிகரிப்பானது மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது எனலாம். இது மேற்கொண்டு தேவையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். நுகர்வு சரியலாம். இது பொருளாதாரத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், தொடர்ந்து பிரச்சனை என்பது வேறு வேறு விதங்களில் பாகிஸ்தானை பதம் பார்த்து வருகின்றது.


Click it and Unblock the Notifications