பாகிஸ்தானில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் தொழில் துறையிலும் அதன் தாக்கம் உள்ளது. இதன் காரணமாக உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வேலை குறைப்பு என்பதும் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சர்வதேச நாடுகளை போல தற்போது பாகிஸ்தான் நிறுவனங்களும் பெரியளவில் பணி நீக்கம் செய்ய தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறிப்பாக பாகிஸ்தானின் முறைசாரா தொழிற்துறையினை சேர்ந்த (informal workers) தொழிலாளர்கள் 1 மில்லியனுக்கும் அதிகமான ஊழியர்கள் டெக்ஸ்டைல் துறையில் பாதிக்கப்படுவார்கள் என NTUF- யின் பொதுத்துறை செயலாளர் நசீர் மன்சூர் தெரிவித்துள்ளார்.
வேலையிழப்பு அதிகரிக்கலாம்
குறைந்தபட்சம் 1 மில்லியன் ஊழியர்கள் தங்களது வேலையினை இழக்க நேரிடலாம். குறிப்பாக ஜவுளித் துறையை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் வேலையை இழக்க நேரிடலாம் என மன்சூர் தெரித்துள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள முறைசாரா தொழிலாளர்கள் எந்த நலத் திட்டமும் அல்லது அவர்களுக்கு எந்த சலுகையும் கிடைக்காது என தெரிவித்துள்ளார்.
இருண்ட சூழ்நிலை
பாகிஸ்தானில் ஏற்கனவே நெருக்கடியான நிலையானது நிலவி வரும் நிலையில், இதனை ஒரு இருண்ட சூழ்நிலை என்ற மன்சூர், பாகிஸ்தானில் தொழிலாளர்களுக்கு பல சிறப்பு சட்டங்கள் வழங்க வேண்டிய நிலை உள்ளதால், அவர்கள் பலர் மூன்றாம் தரப்பு ஒப்பந்தங்கள் மூலம் பணியமர்த்தப்படுவதாகவும் கூறப்படுகின்றது. இதன் காரணமாக தொழிலாளர்கள் முறைசாரார் ஆவார்கள்.. அவர்களால் நீதிமன்றத்திற்கு செல்ல முடியாததால் அவர்களை பணி நீக்கம் செய்வது வசதியானது.
15 நாட்கள் வந்தால் போதும்
மன்சூர் இது குறித்து கூறுகையில் தற்போதுள்ள தொழிலாளர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் அதிகரித்து வரும் செயல்பாட்டு செலவினங்களை கட்டுப்படுத்த, இன்னும் கூடுதலாக பல சவால்களை எதிர்கொண்டுள்ளது.
தற்போது நிலவி வரும் நிலைக்கு மத்தியில் பெரும்பாலான, நிறுவனங்கள் மாதத்தில் 15 நாட்கள் மட்டுமே முறைசாரா ஊழியர்களை வருமாறு கூறுகின்றனவாம்.
1 மாத வேலை - 15 நாட்கள் சம்பளம்
அவர்களிடம் 1 மாத வேலைகளை வாங்கிக் கொண்டு, 15 நாட்களுக்கான சம்பளம் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
மற்றொரு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர், பணி நீக்க அச்சம் என்பது இருந்தாலும், இது நியாயமான ஒன்று தான். எனினும் பெரும்பாலான நிறுவனங்கள் அனைத்து ஊழியர்களையும் தக்கவைத்துக் கொள்ள விரும்புகின்றன. அவர்களின் நிபுணத்துவத்தை பயன்படுத்த விரும்புகின்றன. தற்போது நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் தற்காலிகமாக பணியமர்த்தலை முடக்க நினைக்கின்றன. இது அன்னிய செலாவணி கையிருப்பு என்பது என்பது அதிகரித்தவுடன் விஷயங்கள் மேம்படலாம்.
செலவு அதிகரிப்பு
கடந்த ஆண்டு கடும் வெள்ளம் ஏற்பட்ட நிலையில் பாகிஸ்தானில் பற்றாக்குறை என்பது இருந்து வருகின்றது. குறிப்பாக கடந்த ஆண்டில் வெள்ள பெருக்கம் இருந்த நிலையில், 45% பருத்தி பயிர்கள் அடித்து செல்லப்பட்டது என மன்சூர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக விலைவாசியும் உயர்ந்துள்ளது. இது நிறுவனங்களின் செலவினை அதிகரித்துள்ளது. பற்றாக்குறையும் உள்ளது.
கடன் பிரச்சனை
இதற்கிடையில் தொழிற்துறைக்கு கடன் கிடைப்பதும் பெரும் பிரச்சனையாகியுள்ளது. இது மேற்கோண்டு மூலதன செலவினங்களை குறைக்க வழிவகுக்கலாம். இது நிறுவனங்களின் வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக வளர்ச்சி விகிதமானது சரிவினைக் காணலாம்.
மூலதனம் இல்லாததால் பாதிப்பு
பாகிஸ்தானில் வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு (FPCCI) தலைவர் இர்பான் இக்பால் ஷேக், பல நிறுவனங்கள் தங்களிடம் சரியான மூலதனம் இல்லாத நிலையில், தங்கள் செயல்பாடுகளை நிறுத்தி விட்டன. அடுத்த மூன்று முதல் 4 மாதங்கள் பொருளாதாரத்திற்கு கடினமான தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
வாகனத் துறையிலும் பணிநீக்கம்
அத்தியாவசிய மூலப்பொருட்கள் கொண்ட கன்டெய்னர்கள் துறைமுகங்களில் பல வாரங்களாக சிக்கியிருக்கும் நிலையில், இது மேற்கோண்டு பாகிஸ்தான் பொருளாதாரத்தை பாதிக்கலாம்.
பாகிஸ்தானின் வாகன உதிரிபாகங்கள் மற்றும் துணைக் கருவிகள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தரவின் படி, வாகனத் துறையில் 25,000 - 30,000 தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வட்டி அதிகம்
பாகிஸ்தானில் கடனுக்கான வட்டி விகிதம் என்பது 19% வரையில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பாகிஸ்தான் அரசு நெருக்கடிக்கு மத்தியில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதையே நிறுத்தியுள்ளது. இந்த நிலையில் வட்டி அதிகரிப்பு என்பது தனி நபர் தொடங்கி பெரும் நிறுவனங்கள் வரையில் அனைத்து தரப்பிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது தேவையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். மக்களின் நுகர்வானது குறையலாம். இது வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது வேலையிழப்புக்கும் வழிவகுக்கலாம். மொத்தத்தில் பாகிஸ்தானின் பொருளாதாரம் மேலும் சரிய வழிவகுக்கலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications