ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளாலும், அரசு நிர்வாகத்தில் தலையிட்டு முறைகேடில் ஈடுபடும் ராணுவத்தினராலும் பாகிஸ்தான் நாட்டு பொருளாதாரம் அதலபாதாளத்துக்குச் சென்று விட்டது. இதனால் அந்நாட்டின் மொத்தக் கடன் ஜூன் 2025க்குள் 79 டிரில்லியன் பாகிஸ்தான் ரூபாய் அளவுக்கு உயர்ந்து விடும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மொத்தக் கடனை தீர்ப்பதற்காக பாகிஸ்தான் நாட்டு அரசு ஒரு மூன்றாண்டு திட்டத்தை இந்த நிதியாண்டு முதல் செயல்படுத்துகிறது.
அதன்படி பாகிஸ்தான் மத்திய பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் மாகாணங்களின் பங்கு தற்போதுள்ள 39.4 சதவீதத்தில் இருந்து 48.7 சதவீதமாக 2027இல் அதிகரிக்கும். மேலும் நாட்டின் மொத்த கடன் நடப்பு நிதியாண்டுக்குள் பாகிஸ்தான் ரூபாய் 79,731 பில்லியனாக ஆகும் எனக் குறிப்பிட்டுள்ளது. லோக்கல் கடன்கள் ரூ.7671 பில்லியன். வெளிநாட்டு கடன் ரூ.818 பில்லியன். நாட்டின் மொத்தக் கடன் சுமையை குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்து வருகிறது.

அதன்மூலமாக ரீபைனான்ஸ் மற்றும் வட்டி விகித ரிஸ்க் மேனேஜ்மென்ட் ஆகியவற்றின் மூலம் கடனைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. புதிய திட்டத்தின்படி மாகாணங்கள் ரூ.10,350 பில்லியனை 2026-27க்குள் பெறும். இது மாகாணங்களுக்கான பங்களிப்பு அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.
நடப்பு நிதியாண்டில் தேசிய பைனான்ஸ் கமிஷன் பங்கின்படி மாகாணங்களுக்கு 39.4 சதவீதம் பட்ஜெட்டில் கிடைக்கும். அதேபோல் பாகிஸ்தானின் மொத்த கடனான 79 டிரில்லியனையும் மாகாணங்களுக்கு விகிதாசாரப்படி பிரித்து அளிக்க வேண்டும் என்பதை அரசு முடிவு எடுத்துள்ளது.
பட்ஜெட் நிதி ஒதுக்கீடு அதிகரிப்பது போல நாட்டின் மொத்தக் கடனையும் அடைக்கும் பொறுப்பும் மாகாண அரசுகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இதன்படி மாகாணங்கள் 48 சதவீத கடனையும் மத்திய அரசு 52 சதவீத கடனையும் அடைக்க வேண்டும்.
இதற்கு முன்னதாக பாகிஸ்தான் அரசும் இன்டர்நேஷனல் மானிட்டரி பண்டும் சேர்ந்து மூன்று ஆண்டுகளுக்கான 7 பில்லியன் டாலர் திட்டத்தை உருவாக்கியுள்ளன. இதன் மூலம் பாகிஸ்தான் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, மேக்ரோ பொருளாதாரத்தை நிலைப்படுத்தி நிலையான வளர்ச்சியை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கலாம் என்று இன்டர்நேஷனல் மானிட்டரி பண்டு கூறியது.
ஆனால் கடந்த மாதம் வெளியான அறிக்கை மூலம் முதல் 11 மாதங்களில் அரசு வாங்கிய கடன் கடந்த இரண்டு நிதியாண்டுகளில் வாங்கியதை விட அதிகமாகும் எனத் தெரிய வந்துள்ளது. அந்த கணிசமான கடன் 7.39 டிரில்லியன் 2023 ஜூலை முதல் 2024 ஜூன் வரை வாங்கப்பட்டதாகும். இது கடந்த இரண்டு நிதியாண்டில் வாங்கிய 7.16 டிரில்லியனைக் காட்டிலும் அதிகம்.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications