பாகிஸ்தான் நெருக்கடி.. மலையளவு கடன், அன்னிய செலாவணி, பணவீக்கம்.. கவனிக்க வேண்டிய 10 காரணிகள்!

பாகிஸ்தான் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து வரும் நிலையில், அன்னிய செலாவணி கையிருப்பும் 3 பில்லியன் டாலருக்கு கீழாக சரிவில் காணப்படுகின்றது.

பாகிஸ்தானின் கையிருப்பு 2.917 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இதற்கிடையில் பல அத்தியாவசிய பொருட்களின் விலையானது மிக மோசமான உச்சத்தினை எட்டியுள்ளது.

அடுத்த இலங்கையாக பாகிஸ்தான் மாறிவிடுமோ? என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதற்கிடையில் பாகிஸ்தானில் நிலவி வரும் 10 மோசமான காரணிகள் பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.

பாகிஸ்தானுக்கு உதவி

பாகிஸ்தானுக்கு உதவி

நிலவி வரும் கடுமையான நெருக்கடிக்கு மத்தியில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து, 1 பில்லியன் டாலர் கடன் தொகையை பெற பல்வேறு நிபந்தனைகளை பாகிஸ்தான் அரசு ஏற்றுக் கொள்ள முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. ஆக விரைவில் பாகிஸ்தானுக்கு தேவையான உதவி கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடும் கடன் நெருக்கடி

கடும் கடன் நெருக்கடி

உலகின் 5 வது பெரிய மக்கள் தொகையை கொண்ட நாடான பாகிஸ்தான், கடும் நெருக்கடியில் தத்தளித்து வருகின்றது. இது இலங்கை மற்றும் வெனிசுலாவையும் விஞ்சலாம் என தெரிகிறது. வாங்கிய கடனை திரும்ப அடைக்க முடியாமல் கடனை செலுத்த, திரும்ப கடன் வாங்கும் நிலையில் பாகிஸ்தான் உள்ளது.

பாகிஸ்தான் ரூபாய்

பாகிஸ்தான் ரூபாய்

பாகிஸ்தானின் டாலருக்கு எதிரான கரன்சி மதிப்பானது மோசமான சரிவினைக் கண்டு வருகின்றது. கடந்த பிப்ரவரி 11 அன்று 271.50 ரூபாயாக சரிவினைக் கண்டும் காணப்பட்டது. இது மேற்கொண்டு பாகிஸ்தானின் பொருளாதாரத்தில் வீழ்ச்சியினை ஏற்படுத்தி வருகின்றது.

பாகிஸ்தான் ரூ.5000 நோட்டு நிறுத்தமா?

பாகிஸ்தான் ரூ.5000 நோட்டு நிறுத்தமா?

பாகிஸ்தானின் 5000 ரூபாயினை நோட்டினை நிறுத்த திட்டமிட்டுள்ளாதாகவும், இது குறித்தான அறிக்கை பாகிஸ்தான் அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுவும் பாகிஸ்தான் பொருளாதாரத்தினை மீட்டெடுக்கவும் உதவும் என பாகிஸ்தான் அரசு நினைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பணவீக்கம்

பணவீக்கம்

பாகிஸ்தானில் பணவீக்கம் என்பது 48 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தினை எட்டியுள்ளது. பாகிஸ்தானின் சிபிஐ தரவானது கடந்த ஜனவரி மாதத்தில் 27.6% ஆக இருந்தது. இதே மொத்த விலை பணவீக்கம் என்பது 28.5% ஆகவும் இருந்தது.

 பணவீக்கத்தின் தாக்கம்

பணவீக்கத்தின் தாக்கம்

அதிகரித்து வரும் பனவீக்க அழுத்தமானது, முக்கிய அடிப்படை கமாடிட்டிகளின் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கோதுமை, வெங்காயம், கேஸ் சிலிண்டர் விலை என பலவும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. சராசரியாக 20 கிலோ எடையுள்ள கோதுமை மாவின் விலையானது ஜனவரி 2022ல் 1164.8 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இது ஜனவரி 2023ல் 1736.5 ரூபாயாகவும் உள்ளது. இது 50% மேலாக அதிகரித்துள்ளது.

எரிபொருள் பற்றாக்குறை

எரிபொருள் பற்றாக்குறை

பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உச்சம் தொட்டுள்ளது. பாகிஸ்தானின் சில இடங்களில் பஞ்சாப் மாகாணத்தில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அங்கு ஏராளமான பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 அன்னிய செலாவணி கையிருப்பு

அன்னிய செலாவணி கையிருப்பு

பாகிஸ்தானின் அன்னிய செலவாணி கையிருப்பு 3 பில்லியன் டாலர்களுக்கு மேலாக சரிவினைக் கண்டுள்ளது. இது இன்னும் சில வாரங்களுக்கே தாக்குபிடிக்கும் என்ற நிலையில், இது இறக்குமதி செய்ய முடியாமல் போகலாம். இதனால் பாகிஸ்தான் பொருளாதாரத்தினை திவால் நிலைக்கு தள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின்சார பயன்பாட்டுக்கு வரி

மின்சார பயன்பாட்டுக்கு வரி

பாகிஸ்தானில் மின்சார பயன்பாட்டின் மீது புதிய வரியை விதித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் கடனை பெறும் நோக்கில் இந்த முடிவை பாகிஸ்தான் அரசு எடுத்துள்ளது. பாகிஸ்தான் அரசின் வருவாயை அதிகரிக்கும் விதமாக அரசு இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தொழில் சாலைகள் மற்றும் விவாசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி

பொருளாதார நெருக்கடி

பாகிஸ்தானின் பொருளாதாரம் தொடர்ந்து மந்த நிலையில் இருந்து வரும் நிலையில், அங்கு இறக்குமதியானது அதிகரித்துள்ளது. அதேசமயம் ஏற்றுமதியானது குறைந்துள்ளது. இது மேற்கொண்டு வர்த்தக பற்றாக்குறையை அதிகரித்துள்ளது. குறிப்பாக விவசாயம் சம்பந்தமான பொருட்கள் ஏற்றுமதியானது குறைந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+