பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், அங்கு விலைவாசி என்பது விண்ணைத் தொடும் அளவுக்கு உச்சத்தில் இருந்து வருகின்றது. இந்த நிலையில் அன்னிய செலாவணி என்பது மிக குறைந்த அளவே கையிருப்பு வைத்துள்ளது.
இதனால் இறக்குமதி என்பதை குறுகிய காலத்திற்கு மட்டுமே செய்ய முடியும் என்ற நிலையே இருந்து வருகின்றது.
இதற்கிடையில் அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் வெளி நாடுகளில் இருந்து அதிக தானியங்கள், கச்சா எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை அதிகம் செய்ய முடியாமல் தத்தளித்து வருகிறது.
பற்றாக்குறை
இதற்கிடையில் மின் பற்றாக்குறை காரணமாக பாகிஸ்தானின் பல பகுதிகள் அவ்வப்போது இருளில் மூழ்கி வருகின்றன. இதனால் தொழிற்துறை உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பாகிஸ்தானில் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக விவசாய உற்பத்தி என்பது மோசமான நிலையினை எட்டியுள்ளது. இதற்கிடையில் பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களுக்கான பற்றாக்குறை என்பது கடுமையாக உள்ளது.
பல்வேறு பிரச்சனைகள்
இப்படி பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் பாகிஸ்தானில் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலையானது மிக மோசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக கோதுமை மாவு கிலோ 200 ரூபாய்க்கும், பால் ஒரு லிட்டர் 200 ரூபாய்க்கும், கோழி இறைச்சி 900 ரூபாய்க்கும் உச்சம் தொட்டுள்ளன. தொழிற்துறை பாதிப்பு காரணமாக ஒரு புறம் உற்பத்தியும் சரிவினை கண்டுள்ளது. மறுபுறம் வேலையிழப்பு, வேலையின்மை விகிதம் என்பது கணிசமாக அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானில் போராட்டம்
இதற்கிடையில் ஏற்கனவே பாகிஸ்தானில் பல போராட்டங்கள் நடந்துள்ளன. குறிப்பாக பாகிஸ்தானின் பலுசிஸ்தான், காஷ்மீரை சேர்ந்த மக்கள் இந்தியாவோடு தங்களை இணைக்க போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கைக்கு இந்தியா உதவியது போன்று பாகிஸ்தானுக்கும் உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக சமூக வலைதளங்கள் வாயிலாக பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சுமூக உறவை பேண வேண்டும்
இத்தகைய சூழலில் இந்திய உளவு அமைப்பான ராவின் முன்னாள் தலைவர் ஏ எஸ் துலாத் பிடிஐ செய்திக்கு அளித்த பேட்டியில், ரஷ்யா சீனா, ஈரான் ஆகியவை கூட்டணி அமைத்து செயல்படுகின்றன. இது ஆபத்தான ஒன்று. அண்மைக் காலமாக அமெரிக்கா இந்தியாவின் கூட்டணி என்பது வலுவடைந்து வருகின்றது. எனினும் அமெரிக்கா வெகு தூரத்தில் இருக்கின்றது. எனவே அண்டை நாடுகளுடன் சுமூக உறவை பேணுவது மிக அவசியம்.
நல்லுறவு வேண்டும்
பாகிஸ்தான் தற்போது மிக கடுமையானதொரு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றது. ஆக இந்த ஆண்டில் பாகிஸ்தானுக்கு பிரதமர் உதவலாம். இதன் மூலம் உதவலாம் என நான் நினைக்கிறேன்.
தற்போதுள்ள நிலையில் வெளி நாடுகளில் இருந்து பாகிஸ்தான் உதவிகளை பெறுவது கடினம். ஆக இந்தியாவுடன் அமைதி பேச்சு வார்த்தை என்பதை மேற்கொள்ள வேண்டும். இந்தியா பாகிஸ்தான் வர்த்தக உறவை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் என்பது தற்போது எழுந்துள்ளது என கூறியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு உதவி
சில தினங்களுக்கு முன்பு ஆசிய பொருளாதார கூட்டத்தில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தானின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், இலங்கை உள்ளிட நாடுகள் நிதி சிக்கலில் இருந்தபோது நாம் உதவினோம். எந்த ஒரு நாடும் குறிப்பாக அண்டை நாடு கடும் பொருளாதார சிக்கலில் இருக்க வேண்டும் என விரும்பவில்லை.
ஜெய்சங்கரின் காட்டமான பதில்?
அதேசமயம் பயங்கரவாதத்தையே தன்னுடைய முதன்மை தொழிலாக கொண்டுள்ள எந்த நாடும், பிரச்சனையில் இருந்து விடுபட முடியாது. வளர்ச்சியினை காண முடியாது. இதனை அந்த நாடு உணர வேண்டும். அண்டை நாட்டுக்கு உதவுவதற்கு முன்பு, நாம் நம் மக்களின் நிலையை உணர வேண்டும் என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications