பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், அதன் அன்னிய செலாவணி கையிருப்பும் கடும் சரிவினைக் கண்டு வருகின்றது. இது மேலும் பாகிஸ்தானுக்கு பிரச்சனையாக மாறக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகின்றது.
இத்தகைய சூழலில் 170 பில்லியன் ரூபாய் அளவுக்கு புதிய வரிகளை விதிக்க உள்ளது. இது மேற்கொண்டு பாகிஸ்தான் பொருளாதாரத்தினை பதம் பார்க்கலாம் எனலாம்.
பணவீக்கத்தினை தூண்டலாம்
இது மேற்கொண்டு பணவீக்கத்தினை தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு பாகிஸ்தானின் பணவீக்கம் என்பது உச்சத்தில் உள்ளது. இந்த நிலையில் புதிய வரி விதிப்பு முறையானது மேற்கொண்டு பாகிஸ்தான் மக்களுக்கு பிரச்சனையாக அமையலாம்.
பாகிஸ்தான் நெருக்கடி
பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி என்பது மிக மோசமாக உள்ள நிலையில், பணவீக்கம் என்பது ஏற்கனவே 48 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தில் உள்ளது. இது கடந்த ஜனவரி 2023ல் 27.6% எனும் அளவுக்கு உள்ளது.
இதற்கிடையில் அன்னிய செலாவணி கையிருப்பும் மிக மிக குறைவாகவே உள்ளது. இதனால் இறக்குமதியும் சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு விலைவாசியினை தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய பொருட்களின் விலை
கோதுமை - ரூ.120
அரிசி - ரூ.240
பச்சைபயறு - ரூ.155 -172
சர்க்கரை - ரூ.90
கோழி - ரூ780
பால் - ரூ.110 - 160
சமையல் எண்ணெய் - ரூ.480 - 490
எலுமிச்சை - ரூ.100
ஆப்பிள் - ரூ.110 - 320
இறைச்சி - ரூ.1100
தயிர் - ரூ.115
கிரீன் டீ - ரூ.1100
தக்காளி - ரூ.40 - 60
நெய் - ரூ.1800 - 2500
பற்றாக்குறை
பாகிஸ்தான் ஏற்கனவே பணவீக்கத்தினால் தத்தளித்து வரும் நிலையில், அங்கு ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக உணவு பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை இருந்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது மேலும் வரி அதிகரிக்கபடும் பட்சத்தில் இவற்றின் விலையானது மேலும் அதிகரிக்க வழிவகுக்கலாம்.
பாகிஸ்தான் அரசு தீவிர முயற்சி
ஆக பாகிஸ்தான் அரசும் மேற்கொண்டு கடும் பிரச்சனைகளை எதிர்கொள்ள கூடும். இதற்கிடையில் தான் பாகிஸ்தான் நிதியமைச்சகம் நிதி திரட்டும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் காரணமாகத் தான் வரி அதிகரிப்பு உள்ளிட்ட பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மேற்கொண்டு பலவற்றிற்கும் அளித்து வந்த மானியத்தையும் குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் வல்லுனர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக பல பொருட்களின் விலையானது மேற்கொண்டு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடன் பெற முயற்சி
குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதற்காக பல்வேறு முயற்சிகளை பாகிஸ்தான் எடுத்து வருகின்றது. தற்போது நிதி திரட்டும் முயற்சியின் மத்தியில், செலவு குறைப்பு நடவடிக்கையையும் எடுத்து வருகின்றது. வருவாயினை அதிகரிக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளது. இது நிதி பெறுவதற்காக என்றாலும், பாகிஸ்தான் மக்களிடையே இது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
$9 பில்லியன் உதவி என்னாச்சு?
பாகிஸ்தான் தனது பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், வெள்ளப் பெருக்கு சிக்கலில் இருந்து மீள்வதற்கு 9 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான உதவி, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடந்த நன்கொடையாளர்கள் மாநாட்டில் பாகிஸ்தானுக்கு உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இன்று வரையில் வெறும் அறிவிப்பாக மட்டுமே இது இருந்து வருவதாகவும், இதுவரையில் இது கையில் கிடைக்கவும் இல்லை எனலாம்.


Click it and Unblock the Notifications