இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளதாகவும், இனி வரும் காலத்தில் கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் தரவு கூறுகிறது.
ஆசிய வளர்ச்சி வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் பாகிஸ்தான் நாட்டின் பிராஜெட் பெர்பாமென்ஸ் 2017-19 ஆண்டுக் காலத்தில் 70 சதவீதமாக இருந்த நிலையில் 2018-20 ஆண்டுக் காலத்தில் 58 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்த மிகப்பெரிய சரிவுக்கு மிக முக்கியக் காரணம் பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாகம் மற்றும் தண்ணீர் துறையின் மோசமான செயல்பாடுகள் தான் என்ற உண்மை உடைந்துள்ளது.
மேலும் பாகிஸ்தான் பொருளாதார வளர்ச்சி மீது நம்பிக்கையில்லாமல் கடந்த நிதியாண்டின் முதல் 3 காலாண்டில் இந்நாட்டின் அன்னிய முதலீட்டு அளவு சுமார் 35 சதவீதம் சரிவை அடைந்துள்ளது. பெரும்பாலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வளர்ச்சி அதிகம் இருக்கும் நாடுகளில் மட்டுமே முதலீடு செய்வார்கள், பாகிஸ்தானில் முதலீட்டு அளவு குறைந்ததற்கு இந்நாட்டின் நிதிநிலை முக்கியக் காரணமாக உள்ளது.

இதேவேளையில் பாகிஸ்தான் நாட்டைத் தொடர்ந்து வழிநடத்த இந்நாட்டு அரசு உலக வங்கியிடம் சுமார் 1.5 பில்லியன் டாலர் அளவிலான தொகையைக் கடனாகப் பெற்றுள்ளது. ஆனால் இந்தக் கடனை அளிக்க உலக வங்கி மின்சாரக் கட்டணத்தை உயர்த்த வேண்டும், புதிய வரி விதிப்புகளை அமலாக்கம் செய்ய வேண்டும் எனப் பல கட்டுப்பாடுகளை இம்ரான் கான் அரசுக்கு விதித்து வருகிறது.
இப்படித் திரும்பும் பக்கமெல்லாம் பாகிஸ்தான் கடுமையான வர்த்தகச் சூழ்நிலையை அடைந்து வருகிறது. இதன் வாயிலாக அடுத்த சில வருடத்தில் பாகிஸ்தான் மிகவும் மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் எனக் கணிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications