எப்போ வேணாலும் அறிவிக்கலாம்.. பாகிஸ்தான் நிலை ரொம்ப மோசம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் அண்டை நாடுகள் அனைத்தும் கடுமையாக நிதி நெருக்கடியில் மாட்டிக்கொண்டு உள்ளது தெரியும், இதில் பாகிஸ்தான் மிகவும் மோசமான நிலையில் மாட்டிக்கொண்டு உள்ளது.

இதனால் 2023 ஆம் அண்டில் வல்லரசு நாடுகள் ரெசிஷன் பிடியில் மாட்டிக்கொண்டு சர்வதேச பொருளாதார வளர்ச்சி பாதிப்பு அடைவதற்கு முன்பாகவே பாகிஸ்தான் நாடு திவாலானதாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2022 ஆம் ஆண்டில் இலங்கை பெரும் நெருக்கடியில் இருந்து மீண்டு தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பும் பாதையில் உள்ளது.

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட்.. அமைச்சர்களுக்கு சலுகை கட்.. மோதமான நிலையில் பாகிஸ்தான்..! அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட்.. அமைச்சர்களுக்கு சலுகை கட்.. மோதமான நிலையில் பாகிஸ்தான்..!

இலங்கை

இலங்கை

இன்று இலங்கை மக்களுக்குப் போதுமான வேலைவாய்ப்பும், வர்த்தகமும் இல்லாமல் தவித்தாலும் 2022 ஆம் ஆண்டுக் காலகட்டத்தைப் போல் இல்லை என்பதால் மக்கள் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் பாகிஸ்தான் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.

 பாகிஸ்தான்

பாகிஸ்தான்

பாகிஸ்தான் அரசு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதி ஆதாரத்தைத் திரட்ட முடியாத காரணத்தால் எப்போது வேண்டுமானாலும் திவாலாகும் நிலையில் உள்ளது என்று பல அமைப்புகள் கணித்து உள்ளது.

இஷாக் தர்

இஷாக் தர்

இதேவேளையில் இதை உறுதி செய்யும் வகையில் நிதியமைச்சர் இஷாக் தர் வெள்ளிக்கிழமை, இஸ்லாத்தின் பெயரால் நிறுவப்பட்ட ஒரே நாடு பாகிஸ்தான் என்றும், அதன் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு அல்லா தான் பொறுப்பு என்று கூறினார்.

இம்ரான் கான் அரசு

இம்ரான் கான் அரசு

இதேபோல் இம்ரான் கான் தலைமையிலான முந்தைய அரசு உருவாக்கிய பிரச்சனைகளைச் சரி செய்யத் தினமும் இரவு, பகலாகப் பணியாற்றி வருகிறது, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான தற்போதைய அரசு என நிதியமைச்சர் இஷாக் தர் பேசியுள்ளார்.

மின்சாரம்

மின்சாரம்

இதேநேரத்தில் தான் பாகிஸ்தான் மக்கள் மின்சாரம் இல்லாமலும், போதுமான எரிபொருள் இல்லாமலும், அதிகப்படியான விலைவாசி உடன் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாகிஸ்தான் டாலர் இருப்பைச் சேமிக்க இறக்குமதியைப் பெரிய அளவில் குறைத்துள்ளது.

அன்னிய செலாவணி

அன்னிய செலாவணி

பாகிஸ்தான் நாட்டின் அன்னிய செலாவணி மிகவும் மோசமாக இருக்கும் நிலையில் டாலர் இருப்பு இல்லாமல் இறக்குமதி செய்ய முடியாமல் மாட்டிக்கொண்டு உள்ளது. பாகிஸ்தான் நாட்டின் துறைமுகத்தில் பல நூறு கண்டைனர்கள் பொருட்கள் உடன் காத்திருந்தாலும், அதை வாங்க அந்நாட்டில் டாலர் இல்லை என்பது தான் தற்போதைய பெறும் பிரச்சனையாக உள்ளது.

12 மணிநேரம் மின்தடை

12 மணிநேரம் மின்தடை

இதேவேளையில் ஒரு நாளில் 12 மணிநேரம் மின்சாரம் இல்லாமல் இருக்கும் காரணத்தால் பாகிஸ்தான் நாட்டின் வர்த்தகம், உற்பத்தி சந்தை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.

தொழிற்சாலைகள் மூடல்

தொழிற்சாலைகள் மூடல்

இதற்கிடையில் பல தொழிற்சாலைகள், நிறுவனங்கள் கடந்த 6 மாத காலத்தில் மூடப்பட்டு உள்ளது, இதைச் சமாளித்து இயங்கி வரும் பெரும்பாலான நிறுவனங்கள் அதிகப்படியான நஷ்டத்தில் இயங்கி வருகிறது.

 மே மாதம்

மே மாதம்

பாகிஸ்தான் பொருளாதாரம் மீட்டு எடுக்க முடியாத அளவில் உள்ளது, இது தொடர்ந்தால் கட்டாயம் இலங்கை போன்ற சம்பவம் பாகிஸ்தான் நாட்டிற்கு வரும். மேலும் இதே நிலை தொடர்ந்தாலோ, புதிய முதலீடுகள் ஈர்க்கப்படாவிட்டாலோ மே மாதம் பாகிஸ்தான் திவாலானதாக அறிவிக்கப்படலாம் என ஆய்வுகள் கூறுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

pakistan economy might collapse by may 2023; Fores, power cut, people struggles for basic needs

pakistan economy might collapse by may 2023; Fores, power cut, people struggles for basic needs
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X