பாகிஸ்தான் : பாகிஸ்தானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், தொடர்ந்து எரிபொருள் விலையை அரசு உயர்த்தி வருகின்றது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அரசு எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது. இது மேற்கொண்டு பாகிஸ்தான் பொருளாதாரத்தினை பதம் பார்க்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
அடுத்த 15 நாட்களில் பெட்ரோல் விலையை 10 ரூபாய் முதல் 14 ரூபாய் வர உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக நிதி அமைச்சர் இஷாக்தார் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய பொருட்கள் விலையானது அதிகரித்து வருகின்றது. இந்த சூழலில் பெட்ரோலிய செலவுகள் அதிகரிப்பு மற்றும் நாணய விகித மாறுபாடு காரணமாக தொடர்ந்து விலை அதிகரித்து வருகின்றது.
அடுத்த இலங்கையாக பாகிஸ்தான் மாறலாம் என நிபுணர்கள் கூறி வரும் நிலையில், பாகிஸ்தான் இன்னும் கடுமையான விலையேற்றத்தினை செய்து வருவது இன்னும் எந்த மாதிரியான சூழலை உருவாக்குமோ? என்ற அச்சம் இருந்து வருகின்றது.
ஏற்கனவே அத்தியாவசிய தேவைகளான உணவு பொருட்கள், தானியங்கள், எரிபொருட்கள், மருத்துவ பொருட்கள் என அனைத்தும் விலை உச்சத்தில் உள்ளது. இவற்றின் விலை கடுமையான உச்சத்தினை தற்போது வரையில் கண்டு வரும் சூழலில், இனியும் இந்த போக்கு தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

அன்னிய செலாவணியும் குறைந்துள்ளதால் தொடர்ந்து ஏற்றுமதிக்கு அரசு என்ன செய்யப்போகிறதோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இப்படி பற்பல நெருக்கடியான சூழலில் தான் பெட்ரோலிய பொருட்கள் விலையும் அடிக்கடி உயர்த்தப்பட்டு வருகின்றது. இது மேற்கொண்டு பணவீக்கத்தினை தூண்டலாம். இது தேவை சரிவினையும் தூண்டலாம்.

மொத்தத்தில் பாகிஸ்தானில் விலை அதிகரிப்புக்கு மத்தியில் பெட்ரோல் விலை 286.77 ரூபாயாகவும், இதே மண்ணெய் லிட்டருக்கு 5.78 ரூபாய் அதிகரித்து, 186.07 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என்றாலும், இது ஏற்கனவே லிட்டருக்கு 293 ரூபாய்க்கும், டீசல் விலை 174.68 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்த விலை அதிகரிப்புக்கு மத்தியில் இந்த விலையேற்றம் இன்னும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஏற்கனவே பணவீக்கம் என்பது 35 சதவீதமாக இருந்த நிலையில், இது இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது 2 சதவீதத்தில் இருந்து, 0.5% ஆக குறையலாம் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. இது அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் வேலையின்மை விகிதம் என பல்வேறு நெருக்கடிக்களுக்கு மத்தியில் இந்தளவுக்கு உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications