பாகிஸ்தான் அரசு தனது தேசிய விமான நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) தனியார்மயக்கும் பணியை வெற்றிகரமாக முடித்துள்ளது. இன்றைய வர்த்தக சந்தையில் விமான நிறுவனங்களை அரசு அமைப்புகள் தனியார் நிறுவனங்கள் நடத்துவது போல் மலிவு விலையில் நடத்தி லாபம் பார்ப்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது.
இதன் காரணமாகவே இந்திய அரசு சமீபத்தில் தனது ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தை நீண்ட நெடிய ஆலோசனைக்கு பின்பு டாடா குழுமத்திற்கு விற்பனை செய்தது. இதே பாதையை தற்போது பாகிஸ்தான் அரசு பின்பற்றி பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) நிறுவனத்தை தனியார்மயக்கியுள்ளது.

பாகிஸ்தான் மோசமான பொருளாதாரத்தில் இருக்கும் காரணத்தால் அந்நாட்டு அரசு கடந்த 5 வருடத்தில் பல அரசு நிறுவனங்களையும், சொத்துக்களையும் விற்பனை செய்தோ அல்லது தனியார்மயமாக்கியோ உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் விமான சேவை போன்ற நிதி செலவு மிகுந்த சேவை பாகிஸ்தான் அரசால் தொடர்ந்து நடத்த முடியவில்லை, அதேபோல் இந்த ஏர்லையன்ஸ்-ன் சேவை தரம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனாலேயே தனியார்மயமாக்கும் முடிவை எடுத்துள்ளது.
பாகிஸ்தான் தலைநகரில் இஸ்லாமாபாத்தில் நடந்த ஏலத்தில் உள்ளூர் முதலீட்டு நிறுவனம் தலைமையிலான கூட்டமைப்புக்கு 135 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய்க்கு கைப்பற்றியது. இது பாகிஸ்தான் அரசின் மிகப்பெரிய தனியார்மயமாக்கும் முயற்சியாகும்.
இந்த ஏலம் இரு கட்டங்களாக நடந்தது, முதலில் மூன்று தகுதி பெற்ற குழுக்கள் ஏலத்தில் தனது பிட்டிங்-ஐ முன்வைத்தன. லக்கி சிமென்ட், தனியார் விமான நிறுவனமான ஏர்ப்ளூ, முதலீட்டு நிறுவனமான அரிஃப் ஹபீப் ஆகியவை இந்த ஏலத்தில் பங்கேற்றன.
ஏல விண்ணப்பங்கள் திறக்கப்பட்ட போது அரிஃப் ஹபீப் ரூ.115 பில்லியன், லக்கி சிமென்ட் ரூ.105.5 பில்லியன், ஏர்ப்ளூ ரூ.26.5 பில்லியன் தொகையை குறிப்பிட்டன. இதன் பின்பு பாகிஸ்தான் அரசு குறைந்தபட்ச விலையாக ரூ.100 பில்லியன் என்று அறிவித்தது.
முதல் கட்டத்தில் அதிக ஏலம் வழங்கிய இரு குழுக்களுக்கு Open Auction-ல் போட்டிப்போட்டது. அரிஃப் ஹபீப் மற்றும் லக்கி சிமென்ட் கடுமையாக போட்டியிட்டன, இப்போட்டியில் படிப்படியாக விலை உயர்த்தின. இறுதியில் அரிஃப் ஹபீப் குழுமம் ரூ.135 பில்லியன் வழங்கியது. இதனால் போட்டியின்றி வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அரசு பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்-ஐ(PIA)தனியார்மயமாக்கி நிதி சுமையை குறைக்க முயன்று வருகிறது. இதேவேளையில் ஏலத்தில் வென்ற அரிஃப் ஹபீப் இந்த விமான நிறுவனத்தில் புதிய முதலீடுகளை செய்ய உள்ளதால் நவீனமயமாக்கப்படும்.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications