பாகிஸ்தான்: பாகிஸ்தானில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் அங்கு இல்லாத பிரச்சனைகளே இல்லை எனலாம். அரசியல் பிரச்சனை தொடங்கி, பொருளாதாரம், வேலையின்மை வரையில் தலை விரித்தாடி வருகின்றது.
குறிப்பாக பட்டதாரி இளைஞர்களுக்கான வேலையின்மை என்பது உயர்ந்து வருவது கவலையளிக்கும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மென்ட் எக்னாமிக்ஸ் (PIDE) இது குறித்து நடத்திய ஆய்வறிக்கையில், ஒட்டுமொத்த வேலையின்மை விகிதத்தினை காட்டிலும், பட்டதாரிகளுக்கான வேலையின்மை என்பது அதிகரித்துள்ளதாகவும் தெரிகிறது.

இந்த இடைவெளியானது 10% மேலாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து PIDE பொருளாதார நிபுணர்கள் சப்ளை பகுதியில் உள்ள பிரச்சனை மற்றும் தேவை சரிவு என இரு காரணங்கள் உள்ளன.
பட்டதாரி இளைஞர்களுக்கான தேவை மற்றும் சப்ளையில், தவறான நிர்வாகம் காரணமாக, பாகிஸ்தானில் அதிகளவிலான வேலையின்மை விகிதம் என்பது அதிகரித்துள்ளது என் ஆய்வறிக்கையானது சுட்டிக் காட்டுகின்றது.
குறிப்பாக ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இளைஞர்களுக்கான வேலையின்மை என்பது அதிகரித்துள்ளது. கடந்த 2020 - 21ல் பட்டதாரிகளுக்கான வேலையின்மை விகிதம் என்பது அப்போதே 16.1% ஆக இருந்துள்ளது. இது 2018- 19 காலகட்டத்தில் 14.9% ஆக இருந்துள்ளது.

குறிப்பாக இன்ஜினியர்கள் மத்தியில் வேலையின்மை விகிதம் என்பது இருமடங்கு அதிகரித்துள்ளது. இது 11 சதவீதம் எனும் அளவில் இருந்து, 23.5% எனும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
வேலையின்மை விகிதத்தில் குறிப்பாக கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரிகளின் எண்ணிக்கையானது 14.2 சதவீதத்தில் இருந்து, 22.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதே விவசாய அறிவியல் பட்டதாரிகள் மத்தியில் வேலையின்மை விகிதம் என்பது 11.4 சதவீதத்தில் இருந்து, 29.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
வேலையின்மை ஒரு புறம் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், மறுபுறம் பாகிஸ்தானில் பணவீக்கம் என்பது உச்சம் தொட்டுள்ளது. ஏற்கனவே பல தாசப்தங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தினை எட்டியுள்ள நிலையில், வேலையின்மை இன்னும் மக்களை வறுமை நிலைக்கு தள்ளியுள்ளது.
அன்னிய செலாவணி கையிருப்பும் குறைந்து கொண்டே செல்லும் நிலையில், நாடு திவால் நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பின் வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால் அங்கு பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விலையும் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இன்னும் விலை அதிகரிப்பானது நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. குறிப்பாக உணவுபொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்து வருகிறது.
வேலையின்மை, பசி, பட்டினி, வறுமை, பொருளாதார நெருக்கடி, நிதி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, பணவீக்கம் என பல்வேறு பிரச்சனைகள் பாகிஸ்தானை சூழ்ந்துள்ள நிலையில், இதில் இருந்து பாகிஸ்தான் எப்படி வெளியே வரப்போகிறதோ தெரியவில்லை.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!



Click it and Unblock the Notifications