அடுத்த இலங்கையாக பாகிஸ்தான் மாறலாம் என நிபுணர்கள் எச்சரித்து வரும் நிலையில், அது விரைவில் நடந்து விடுமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது.
ஏனெனில் இலங்கையில் போலவே பாகிஸ்தானும் அன்னிய செலவாணியானது மோசமான சரிவினைக் எட்டியுள்ளது.
ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்தினை அணுகியுள்ள பாகிஸ்தான், ஐஎம்எஃப்-பின் வேண்டுகோள் படி, எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.
உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை
சர்வதேச சந்தையில் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையை அதிகரித்து வரும் நிலையில், பணவீக்கமும் உச்சம் தொட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே எரிபொருள் விலையானது பலத்த உச்சத்தினை எட்டியுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானிலும் விலை எகிறியுள்ளது. இதற்கிடையில் ஐஎம்எஃப்-ன் கோரிக்கையை ஏற்று தொடர்ந்து விலை அதிகரித்து வருகிறது.
வட்டி விகிதம் அதிகரிப்பு
இந்த நிலையில் பணவீக்க விகிதமானது உச்சம் எட்டியுள்ளது. இதற்கிடையில் பணவீக்கத்தினை குறைக்க 125 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதம் அதிகரித்து, 15% ஆக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டின் மத்திய வங்கியின் தற்காலிக கவர்னர் முர்தாசா சையத் தெரிவித்துள்ளார்.
13 ஆண்டுகளில் இல்லாதளவு உச்சம்
கடந்த மாதம் பாகிஸ்தானில் 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து முக்கிய வட்டி விகிதம் 525 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது.
தாக்கத்தினை ஏற்படுத்தலாம்
பாகிஸ்தானின் இத்த்கைய பொருளாதாரத்தினை மீட்டெடுக்கும் நடவடிக்கையானது, கடந்த செப்டம்பரில் இருந்து தொடர்ந்து கொண்டுள்ளது.
பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையானது பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாகும். எனினும் இது சாமானிய மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications