இந்தியாவுடன் எல்லையை பகிர்ந்துகொண்டுள்ள பாகிஸ்தான் எப்போது வேண்டுமானாலும் திவால் ஆகலாம் என்ற நிலையில் இருக்கிறது. அந்நாட்டின் பொருளாதாரத்தைக் காப்பாற்ற IMF அமைப்பிடம் நிதியுதவியைப் பெற நாள்தோறும் போராடி வருவது மட்டும் அல்லாமல் அரசின் நிதிநிலையை மேம்படுத்தப் பல கட்டணத்தையும், வரியையும் பாகிஸ்தான் அரசு உயர்த்தியுள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டில் புதிதாக அமைந்துள்ள அரசு பல முக்கிய மாற்றத்தைச் செய்துள்ளது, குறிப்பாக ஒவ்வொரு துறையிலும் திறமையான, அனுபவம் உள்ள அதிகாரிகளை நியமிக்கும் முயற்சியை ஷெபாஸ் ஷெரீப் அரசு எடுத்துள்ளது.

இதில் முக்கியமாக முந்தைய ஆட்சி காலத்தில் பாகிஸ்தான் நாட்டின் நிதியமைச்சராக இருந்த இஷாக் தர், இந்த முறை வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து ஜேபி மோர்கன் சேஸ் & கோ நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் வங்கியாளரான முகமது ஔரங்கசீப்-ஐ நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார்.
பாகிஸ்தான் அரசு அந்நாட்டுப் பொருளாதாரம் திவால் ஆவதை தடுக்கும் பொருட்டு, பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அந்நாட்டின் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை யாரும் எதிர்பார்க்காத வகையில் 16.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
பாகிஸ்தான் அரசு 2025 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் புதன்கிழமை வெளியிட்ட நிலையில், பாகிஸ்தான் அரசு ராணுவத்திற்கான ஒதுக்கப்பட்டு உள்ள நிதி தொகையை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த பட்ஜெட்டில் அறிக்கையில் கூடுதலாகப் பாகிஸ்தான் அரசு ஊழியர்களின் சம்பளமும் 25% உயர்த்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மிக மோசமான பொருளாதார நிலையில் இருந்தாலும், அந்நாட்டில் ஆயுத உற்பத்தி பெரிதாக இல்லாத நிலையிலும், வெளிநாட்டில் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்ய ராணுவத்திற்குத் தொடர்ந்து பணம் செலவழித்து வருகிறது.
2024-25 நிதிய ஆண்டிற்கான ராணுவ நிதி ஒதுக்கீட்டில் 7.37 பில்லியன் டாலர் ஒதுக்கியுள்ளது. இது கடந்த ஆண்டில் 6.33 பில்லியன் டாலர் அளவீட்டை ஒப்பிடுகையில் 16.4% அதிகமாகும்.
இதேவேளையில் இந்தியாவின் இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் இந்திய அரசு பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு 75.2 பில்லியன் டாலராக இருந்தது. இது கடந்த ஆண்டை விட 4.7% மட்டுமே அதிகமாகும்.
இதேபோல் சீனா இந்த நிதியாண்டில் அதன் பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட் ஆக 232 பில்லியன் டாலர் தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீப காலமாக சீனா, பாகிஸ்தானின் மிகப்பெரிய ராணுவ கூட்டாளியாக உருவெடுத்துள்ளது. பாகிஸ்தான் உலகின் ஐந்தாவது பெரிய ஆயுத இறக்குமதியாளராக உள்ளது. 2019-2023 காலகட்டத்தில் பாகிஸ்தானின் ஆயுத இறக்குமதியில் 82% சீனாவில் இருந்து வந்தது என்று SIPRI அமைப்பின் டேட்டா காட்டுகிறது.
2009-2013 காலகட்டத்தில், பாகிஸ்தானின் ஆயுதங்களில் சுமார் 51% மட்டுமே சீனாவில் இருந்து வந்தது, மீதமுள்ளவை மேற்கத்திய நாடுகளால் வழங்கப்பட்டது.
கடந்த எட்டு ஆண்டுகளில், பாகிஸ்தானின் ராணுவ பட்ஜெட் இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது. போர் விமானங்கள், போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ட்ரோன்கள் போன்ற பெரும்பாலான முக்கிய ஆயுதங்கள் சீனாவில் இருந்து வருகின்றன.
சர்வதேச ஆயுத கண்காணிப்பு அமைப்பான SIPRI தகவலின்படி, 2019-2023 காலகட்டத்தில் சீனாவின் அனைத்து ஆயுத ஏற்றுமதியில் சுமார் 61% பாகிஸ்தானுக்கு சென்றதுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் ஒதுக்கியுள்ள 7.37 பில்லியன் டாலரில் பெரும் தொகை சீனாவுக்கு செல்ல வாய்ப்பு அதிகமாக உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications