Pakistan: 24 வருடங்களில் இல்லாத வட்டி உயர்வு.. மக்கள் அதிர்ச்சி.. மீண்டு வர வழியே இல்லையா?

ஸ்டேட் பாங்க் ஆப் பாகிஸ்தான் அதன் முக்கிய பெஞ்ச்மார்க் விகிதத்தினை 100 அடிப்படை புள்ளிகளை அதிகரித்து, 17% ஆக அதிகரித்துள்ளது. இந்த வட்டி விகிதமானது 1997 -க்கு பிறகு மிக அதிகமான விகிதமாகும்.

இலங்கையை அடுத்து பாகிஸ்தானும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது. குறிப்பாக விலைவாசி தொடங்கி, அன்னிய செலவாணி வரையில் பெரும் சிக்கலில் உள்ளது எனலாம்.

இந்த நிலையில் பணவீக்கமும் பல வருடங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தில் காணப்படுகின்றது. இதனை குறைக்கும் விதமாக பாகிஸ்தான் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது.

பணவீக்க அழுத்தம்

பணவீக்க அழுத்தம்

ஸ்டேட் பாங்க் ஆப் பாகிஸ்தானின் கவர்னர் ஜமீல் அகமது, பணவீக்க அழுத்தம் என்பது தொடர்ந்து சந்தையில் காணப்படுகின்றது. இது தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகின்றது. இது எதிர்பார்ப்பினை விட அதிகளவில் உள்ளது. இதற்கிடையில் தான் மத்திய வங்கியானது பணவீக்கத்தினை குறைக்க, ஒரு நிலைத்தன்மையை கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வட்டி அதிகரிப்பானது பணவீக்கத்தினை கட்டுப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வளவு அதிகரிப்பா?

இவ்வளவு அதிகரிப்பா?

பாகிஸ்தானின் மத்திய வங்கியானது தற்போது 100 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. இந்த விகிதமானது கடந்த செப்டம்பர் 2021ல் இருந்து மொத்தம் 1000 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இது தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில் அதனை குறைக்க எடுத்துள்ள நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

ப்ளூம்பெர்க் ஆய்வின் படி, 43 பொருளாதார நிபுணர்களில், 25 பொருளாதார நிபுணர்கள் வட்டி விகிதத்தினை 100 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்த்தனர். அதன்படியே தற்போது மத்திய வங்கியும் இந்த வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. முன்னதாக பல நிபுணர்களும் இந்த வட்டி விகிதத்தினை 75 - 200 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

 24 வருடங்களில் இல்லாத அளவுக்கு உச்சம்

24 வருடங்களில் இல்லாத அளவுக்கு உச்சம்

பாகிஸ்தானின் இந்த அதிகரிப்பானது 24 வருடங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தினை எட்டியுள்ளது. பணவீக்கமும் உச்சத்தில் இருந்து வரும் நிலையில் சப்ளையிலும் தாக்கம் இருந்து வருகின்றது. தற்போது பாகிஸ்தானில் அன்னிய செலவாணி கையிருப்பும் மிக குறைவாகவே காணப்படுகிறது.

திவால் நிலையா?

திவால் நிலையா?

சில வாரங்களுக்கு முன்பு பாகிஸ்தானின் மத்திய வங்கியில் 3 வாரத்திற்கு போதிய அளவிலான கையிருப்பானது உள்ளது. அதன் பிறகு பாகிஸ்தான் திவால் நிலைக்கு தள்ளப்படலாம் என்ற கருத்துகள் வெளியாகியது. இதற்கிடையில் தற்போது அதிகரிப்பினால் இனி பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

பாகிஸ்தானுக்கு நெருக்கடி

பாகிஸ்தானுக்கு நெருக்கடி

கொரோனா தொடங்கி, பணவீக்கம், கடும் நிதி நெருக்கடி, பெரு வெள்ளம், தானியங்கள் உற்பத்தி சரிவு, எரிபொருள் பற்றாக்குறை என பல பிரச்சனைகள் மத்தியில், தற்போது உலக பொருளாதார மந்த நிலையும் சேர்ந்து கொண்டுள்ளது. இது மேற்கொண்டு பாகிஸ்தானிற்கு நெருக்கடியாக பார்க்கப்படுகிறது.

இஷாக் டார் சொன்னது பொய்யா?

இஷாக் டார் சொன்னது பொய்யா?

கடந்த ஆண்டு இறுதியில் பாகிஸ்தானின் நிதியமைச்சர் இஷாக் டார், அரசு விரைல் வட்டியில்லா வங்கி முறையை விரைவில் அறிமுக்கப்படுத்தும் என்றும் கூறியிருந்தது நினைவுகூறத்தது. வட்டியில்லா வங்கி முறையை அமல்படுத்துவதாக கூறிய நிலையில், கடந்த ஆண்டில் இருந்து மட்டும் 1000 அடிப்படை புள்ளிகள் வட்டியை அதிகரித்திருப்பது மேலும் பல கேள்வியை எழுப்பியுள்ளது.

வறுமைகே கொண்டு செல்லும்

வறுமைகே கொண்டு செல்லும்

இஸ்லாமிய சட்டப்படி வட்டியில்லா வங்கி சேவை வழங்கப் போவதாகவும், இந்த சேவையானது 2027ம் ஆண்டிற்குள் கொண்டு வரப்படும். பாகிஸ்தான் நாடு பெரும்பாலும் இஸ்லாமிய மக்கள் நிறைந்த ஒரு நாடாகும். இஸ்லாமிய மத சட்டங்களின் படி, வட்டிக்கு கடன் கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது என கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது. வட்டி வசூலித்தாலும் பரவாயில்லை. ஆனால் 17% என்பதெல்லாம் மிக அதிகம். இது பாகிஸ்தான் மக்களை மேலும் வறுமைக்கே கொண்டு செல்லும் எனலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+